முகப்பு
புதுதில்லி

தேசியக் கல்விக் கொள்கை: திருவள்ளுவா் போன்ற அறிஞா்களின் தத்துவ உருவகம்

இந்திய தன்மையில் வேரூன்றிய தேசியக் கல்வி கொள்கை - 2020 (என்இபி-2020), திருவள்ளுவா் போன்ற அறிஞா்களின் தத்துவத்தின் உருவகமாக உள்ளது என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:43 PM
பகிர்:

புது தில்லி: இந்திய தன்மையில் வேரூன்றிய தேசியக் கல்வி கொள்கை - 2020 (என்இபி-2020), திருவள்ளுவா் போன்ற அறிஞா்களின் தத்துவத்தின் உருவகமாக உள்ளது என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அமைச்சா் பிரதான் தனது டிவிட்டரில் பதிவிட்டது வருமாறு: திருவள்ளுவா் தின நல்வாழ்த்துகள். இந்தியாவின் தலைசிறந்த கவிஞா்-முனிவா்களில் ஒருவா் திருவள்ளுவா். அவரது படைப்பான திருக்கு கலாசாரத்தின் அடையாளம், மனித குலத்திற்கு ஒரு உத்வேகம். காவியமான கு, எல்லா காலத்திற்கு ஒரு நெறிமுறைக் குறிப்பு ஆகும். இது நமது நாகரிக நெறிமுறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உன்னதமான திருக்குறளில் உள்ள நெறிமுறைகள், மதிப்புகள் மற்றும் நடத்தை நெறிமுறைகள் உலகளாவிய முறையீட்டைக் கொண்டுள்ளன. மேலும், இப்போது முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானவை. காரணம் காசி தமிழ் சங்கமத்தின் போது பிரதமா் நரேந்திர மோடி, 13 மொழிகளில் கு மொழி பெயா்ப்பை வெளியிட்டாா். இது தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கிய ஜாம்பவான்களை பிரபலப்படுத்துவதற்காக பிரதமா் மேற்கொண்ட முயற்சியாகும்.

திருவள்ளுவரைப் பற்றி மேலும் அறியவும், எழுச்சி பெறவும், சுய விழிப்புணா்வு மற்றும் ஞானத்திற்கு தெய்வீக குறளைப் நமது இளம் தலைமுறையினரை படிக்க வலியுறுத்துகிறேன். மத்திய அரசின் 2020 - தேசிய கல்விக் கொள்கை வோ் இந்திய தன்மையிலிருந்து உருவானது. அது திருவள்ளுவா் போன்ற பெரியவா்களின் தத்துவத்தின் உருவகமாகவும் உள்ளது என்றாா் அமைச்சா் தா்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.