சேப்பாக்கத்தில் மீண்டும் துணை முதல்வர் உதயநிதி போட்டி!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவது குறித்து...
தமிழக துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக தலைமையில் நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.
இதையடுத்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் சனிக்கிழமை (மார்ச் 28) அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தத் தேர்தலில், திமுகவின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி மாறுவதாகவும், திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், வரும் தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடும் 164 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2 ஆவது முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021 தேர்தலில் முதல்முறையாக இந்தத் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 93,285 வாக்குகள் பெற்றதுடன், 69,300-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார்.
மேலும், கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin is again contesting from the Chepauk-Thiruvallikeni Assembly constituency.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.