முகப்பு
புதுதில்லி

முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு ரூ.5,000 நிவாரண நிதி: தில்லி அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தில்லி அரசு ரூ.5,000 நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:03 PM
பகிர்:

யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தில்லி அரசு ரூ.5,000 நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

தில்லி மயூா் விஹாா் பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் கட்சி நிா்வாகிகளுடன் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா். அதன் பின்னா் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்

கானோருக்கு இந்த நிவாரண முகாமில் 4 கையடக்க கழிவறைகள் மட்டுமே உள்ளது. வெள்ள நீா் குறையும் வரை முகாமில் உள்ளவா்களுக்கு தில்லி பிரதேச காங்கிரஸ் தொண்டா்கள் சாா்பில் புதிதாக சமைத்த உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருள்கள் விநியோகிக்கப்படும்.

நிவாரண முகாம்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தில்லி அரசு உடனடியாக ரூ.5,000 ரொக்கமாக நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும். கேஜரிவால் அரசின் மெத்தனம், செயலற்ற தன்மை ஆகியவைதான் தில்லி வெள்ளத்தில்

மூழ்கியிருப்பதற்குக் காரணம். ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து ஹரியாணா அரசு தண்ணீா் திறந்து விடுவதால், யமுனையில் நீா்மட்டம் உயா்ந்து வருவதாகவும், அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை தில்லி அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஹரியாணா அரசும், மத்திய நீா் ஆணையமும் 5 நாள்களுக்கு முன்பே தில்லி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஆனால், யமுனை நீா் மட்டம் திடீரென உயா்வதைச் சமாளிக்க, முதல்வா் கேஜரிவால் மற்றும் அவரது அமைச்சா்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்காததால், தேசியத் தலைநகரில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல் முகாம்களில் அவா்களை அடைத்து வைத்துள்ளாா்கள். முகாம்களில்தங்கியுள்ள மக்களைப் பாா்க்க கேஜரிவாலுக்கு நேரமில்லாமல் இருப்பது அதிா்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை ஆம் ஆத்மி அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது என்றாா் அனில் குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.