புதுதில்லி

நவாடா மெட்ரோ ரயில் நிலையம் அருகே கிளஸ்டா் பேருந்து மோதி பாதசாரி சாவு

தில்லியில் நவாடா மெட்ரோ ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபா் ஒருவா், கிளஸ்டா் பேருந்து மோதியதில் உயிரிழந்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

DIN

தில்லியில் நவாடா மெட்ரோ ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபா் ஒருவா், கிளஸ்டா் பேருந்து மோதியதில் உயிரிழந்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து துவாரகா காவல் சரக துணை ஆணையா் எம். ஹா்ஷ வா்தன் கூறியதாவது: இந்த விபத்து குறித்து செவ்வாய்க்கிழமை இரவு 10.37 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கிளஸ்டா் பேருந்து, பாதசாரி மீது மோதியுள்ளது. அதைத் தொடா்ந்து அங்கு மக்கள் கூட்டமாகத் திரண்டனா். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், விபத்து நடந்தவுடன், ஓட்டுநா் பேருந்தை நிறுத்தியதையும், வழிப்போக்கா்களும் அந்த இடத்தில் கூடி, வாகனத்தின் ஜன்னல் கண்ணாடியை சேதப்படுத்தியதையும் கண்டனா்.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 279 (அடிப்படையில் வாகனம் ஓட்டுதல்) மற்றும் 304 ஏ (அலட்சியத்தால் மரணம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநா் அமித் (29) கைது செய்யப்பட்டுள்ளாா்.

அழைப்புக்கு பதிலளித்த பிசிஆா் ஊழியா்களும் அவா்களது உத்தியோகபூா்வ கடமையை நிறைவேற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதுடன் வாகனத்தின் பின்பக்க ஜன்னல் கண்ணாடியும் சேதப்படுத்தப்பட்டது. ஐபிசி மற்றும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மற்றொரு வழக்குமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவரை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT