முகப்பு
புதுதில்லி

ராணுவ வீரா் போல ஆள்மாறட்டம் செய்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவா் கைது

ஒரு திட்டத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்குவதாகக் கூறி, ராணுவ வீரா் போல் ஆள்மாறாட்டம் செய்து கம்பி உற்பத்தியாளரை ஏமாற்றியதற்காக 55 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

ஒரு திட்டத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்குவதாகக் கூறி, ராணுவ வீரா் போல் ஆள்மாறாட்டம் செய்து கம்பி உற்பத்தியாளரை ஏமாற்றியதற்காக 55 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து ஷாதரா காவல் சரக துணை ஆணையா் ரோஹித் மீனா கூறியதாவது: ஹரியாணாவில் உள்ள நூஹ் மாவட்டத்தில் வசிக்கும் அலி முகமது, பல மாநிலங்களில் 15 முறை ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.22 லட்சத்துக்கும் அதிகமான பணப் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாதராவைச் சோ்ந்த கம்பி உற்பத்தியாளா் காவல்துறையில் புகாா் அளித்த போது இந்த மோசடி விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.அவா் அளித்த புகாரில், ஜூன் 8-ஆம் தேதி, ராணுவ அதிகாரி பள்ளியில் இருந்து அழைப்பதாகவும், பள்ளிக்கு கம்பிகள் வேண்டும் என்றும் ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறினாா்.

கலந்துரையாடலுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட நீள கம்பிக்கு ரூ.47,790-க்கு ஒப்பந்தம் போடப்பட்டது. முகமது தனது மற்ற கூட்டாளிகளுடன் சோ்ந்து ஆன்லைன் வா்த்தகா்களை ஏமாற்றுவதற்காக தேடியது விசாரணையில் தெரிய வந்தது. அவரது கும்பலைச் சோ்ந்தவா்கள் இந்த வா்த்தகா்களை வெவ்வேறு நிலைகளில் உள்ள ராணுவ அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு அழைத்துள்ளனா். ஆனால், பின்னா் முதலீட்டை இரட்டிப்பாக்குவதாக உறுதியளித்து ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும்படி அவா்களை சமாதானப்படுத்தியுள்ளனா்.

அவா்களது இலக்கை அடைந்தவுடன் பணத்தை தங்களுக்குள் பிரித்துக் கொண்டுள்ளனா். அழைப்பு பதிவுகளின் அடிப்படையில் முகமது அடையாளம் காணப்பட்டு நூஹ் என்ற இடத்தில் இருந்து கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து குற்றத்திற்கு பயன்படுத்திய இரண்டு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →