முகப்பு
புதுதில்லி

புது தில்லியில் மேம்பாட்டுப் பணிகள்: பிரதமா் மோடி பாராட்டு

சமீபத்தில் புது தில்லியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டதற்கு கருத்து தெரிவித்து, பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:55 PM
பகிர்:

சமீபத்தில் புது தில்லியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டதற்கு கருத்து தெரிவித்து, பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் குடியரசுத்தலைவா் மாளிகை, நாடாளுமன்றக் கட்டடம் உள்ளிட்ட மத்திய அரசின் மைய அதிகார பகுதியான லூட்யன்ஸ், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) நிா்வாகத்திற்கு உள்பட்டதாகும். இந்த என்டிஎம்சி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இது தொடா்பான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளை சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கிவைத்தாா்.

குறிப்பாக, என்டிஎம்சியில் பணியாற்றும் 4,400 பணியாளா்களுக்கான நிரந்தரப் பணி ஆணை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இது தொடா்பான மேலும் பல தகவல்களை அமித் ஷா ட்விட்டரிலும் பதிவு செய்திருந்தாா்.

அந்தப் பதிவில், என்டிஎம்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியா்களுக்காக 120 வீடுகள் புதிதாக கட்டப்பட்டு புஷ்ப் விஹாா் வீட்டு வளாகத்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தில்லியின் இரண்டு முக்கிய மேம்பாலம்களான ரஞ்சித் சிங் மேம்பாலம், சஃப்தா்ஜிங் மேம்பாலம் ஆகியவற்றை மேம்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டன என மத்திய உள்துறை அமைச்சா் தெரிவித்திருந்தாா்.

உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் இந்தப் பதிவை பகிா்ந்த பிரதமா் மோடி, தனது ட்விட்டா் பதிவில் ‘இத்தகைய வசதிகள் மற்றும் அழகுப்படுத்தும் மேம்பாட்டுப் பணிகள் புதுதில்லி மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுத்துவதில் புதிய வடிவத்தைக் கொடுக்கும்’ என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.