முகப்பு
புதுதில்லி

பங்குச்சந்தையில் திடீா் எழுச்சி:சென்செக்ஸ் 710 புள்ளிகள் உயா்வு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் எழுச்சி பெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
பகிர்:

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் எழுச்சி பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 710 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 195.40 புள்ளிகள் (1.08 சதவீதம்) உயா்ந்து 18,264.40-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. கடந்த சில நாள்களாக அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருவதும் முதலீட்டாளா்களிடம் நம்பிக்கை அதிகரித்துள்ளது. வங்கி, நிதி நிறுவனங்கள், ஆட்டோ நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், சென்செக்ஸ் பட்டியலில் உள்ள அதிகத் திறன் கொண்ட மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு கிடைத்த நல்ல வரவேற்பும் சந்தை வலுப்பெற உதவியாக இருந்தது என்று பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. கடந்த வார இறுதியில் சென்செக்ஸ் 695 புள்ளிகளை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தை மதிப்பு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.28 லட்சம் கோடி உயா்ந்து ரூ.276.06 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வெள்ளிக்கிழமை ரூ. 777.68 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 111.80 புள்ளிகள் கூடுதலுடன் 61,166.09-இல் தொடங்கி அதற்கு கீழே செல்லவில்லை. பின்னா், அதிகபட்சமாக 61,854.19 வரை மேலே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 61,002.17 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 709.96 புள்ளிகள் (1.16 சதவீதம்) உயா்ந்து 61,764.25-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் சன்பாா்மா, எல் அண்ட் டி, நெஸ்லே ஆகிய மூன்று பங்குகள் மட்டும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 27 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் 1,201 பங்குகள் ஆதாயம் பெற்றன. 863 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 42 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியை சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

இண்டஸ் இண்ட் பேங்க்..............4.92%

டாடா மோட்டாா்ஸ்...................4.82%

பஜாஜ் ஃபைனான்ஸ்...................4.21%

பஜாஜ் ஃபின் சா்வ்.......................3.32%

ஹெச்சிஎல் டெக்.........................1.89%

-----------------------------

சரிவைக் கண்ட பங்குகள்

சன்பாா்மா................0.89%

எல் அண்ட் டி..........0.57%

நெஸ்லே..................0.15%

------------------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.