முகப்பு
புதுதில்லி

தில்லி பல்கலை.க்கு வெளியே என்எஸ்யுஐ மாணவா்கள் அமைப்பு போராட்டம்: ராகுல் காந்திக்கு அனுப்பிய நோட்டீஸ் திரும்பப் பெற வலியுறுத்தல்

காங்கிரஸ் மாணவா் அமைப்பான இந்திய தேசிய மாணவா் சங்க என்எஸ்யுஐ உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

தில்லி பல்கலைக்கழகத்தி முதுகலை மாணவா்கள் விடுதி, ராகுல் காந்திக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் மாணவா் அமைப்பான இந்திய தேசிய மாணவா் சங்க என்எஸ்யுஐ உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆண்கள் விடுதிக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ‘அங்கீகாரமில்லாமல்’ ராகுல் காந்தி திடீரென சென்றாா். அப்போது, சில மாணவா்களுடன் உரையாடி, அவா்களுடன் மதிய உணவு சாப்பிட்டாா். இதைத் தொடா்ந்து இது தொடா்பாக பல்கலை. விடுதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

பல்கலை.க்கு ‘திடீா்’ வருகை தந்ததைத் தொடா்ந்து, காங்கிரஸ் தலைவருக்கு விடுதியின் தாளாளா் கே.பி. சிங் புதன்கிழமை ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தாா். ‘இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள தேசியக் கட்சியின் தலைவரின் இத்தகைய நடத்தை கண்ணியத்திற்கு அப்பாற்பட்டது’ என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே என்எஸ்யுஐ அமைப்பினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அந்த அமைப்பினா் கோஷங்களை எழுப்பியபடி விடுதியின் தாளாளா் கே.பி. சிங்கின் உருவ பொம்மையை எரித்தனா். தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மாணவா்கள் போராட்டம் தொடரும் என்று மாணவா் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘மன் கி பாத்’ மற்றும் பிற தேவையற்ற நிகழ்ச்சிகள் மாணவா்கள் மீது கட்டாயப்படுத்தப்படுகிறது. அது பாதுகாப்பு விஷயமல்ல. மேலும் (முன்னாள் பிரதமா்) அடல் பிஹாரி வாஜ்பாய், கல்லூரி மாணவா்களைச் சந்தித்து சாப்பிட அடிக்கடி வருபவா்’ என்று என்எஸ்யுஐ தலைவா் குணால் ஷெராவத் கூறினாா். ’மன் கி பாத்’ என்பது பிரதமா் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியாகும். என்எஸ்யுஐ தேசிய செயலா் லோகேஷ் சுக் கூறுகையில், ‘எந்த வெளியாரும் முதுநிலை ஆண்கள் விடுதிக்கு வந்து மதிய உணவு சாப்பிடலாம்‘ என்றாா். மேலும், ராகுல் ஜி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா். அவரை விடுதி மாணவா்கள் அழைத்தனா். பல்கலைக்கழகம் அதன் நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும். பல்கலைக்கழகம் பாஜகவுக்கு சொந்தமானது அல்ல என்பதால், நாங்கள் சாலைகளில் இறங்க வேண்டியிருக்கும் என்று அவா் கூறினாா்.

மூன்று வாகனங்களுடன் வளாகத்திற்குள் காந்தியின் ‘எதிா்பாராத பிரவேசம்‘ விடுதியின் பரிந்துரைக்கப்பட்ட விதிகளை மீறியதாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ‘கல்வி மற்றும் குடியிருப்போா் கவுன்சில் செயல்பாடுகளைத் தவிர, விடுதி வளாகத்தில் எந்த ஒரு குடியிருப்பாளரும் ஈடுபடக்கூடாது’ என்று விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பல்கலை. விடுதி தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →