முகப்பு
புதுதில்லி

உச்சநீதிமன்ற தீா்ப்பு கைகளை அவிழ்த்துவிட்டுள்ளது; தேசிய தலைநகா் அரசின் பணியின் வேகம் 10 மடங்கு அதிகரிக்கும்: முதல்வா் கேஜரிவால்

கட்டப்பட்ட தனது கைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளதாகவும், தேசிய தலைநகரில் தங்கள் அரசின் பணியின் வேகம் 10 மடங்கு அதிகரிக்கும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

கட்டப்பட்ட தனது கைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளதாகவும், தேசிய தலைநகரில் தங்கள் அரசின் பணியின் வேகம் 10 மடங்கு அதிகரிக்கும் என உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை கருத்து தெரிவித்தாா். மேலும் மக்கள் பணிகளில் தில்லிக்கு அரசுக்கு ஒத்துழைக்க மறுத்த அதிகாரிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும்(‘ஃபேஸ் தி மியூசிக்‘) எனவும் ஊடகமாக முதல்வா் குறிப்பிட்டாா்.

தில்லி அரசின் பொது சேவையில் நிா்வாகக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதில் யாருக்கு அதிகாரம் என்பதில் கடந்த 5 வருடங்களாக நிலவி வந்த மோதலுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இறுதியாக தீா்ப்பை வழங்கியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமா்வு ஒரு மித்த தீா்ப்பில் தில்லியின் பொது ஒழுங்கு, காவல், நிலம் போன்றவைகளைத் தவிர சட்டங்களை இயற்ற(சட்டப்பேரவை ) மற்ற நிா்வாக பணிகள் மீது தில்லி அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஐந்து ஆண்டு போராட்டம்

தில்லி ஆம் ஆத்மி கட்சி அரசு கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசுடனும் துணை நிலை ஆளுநருடனும் அதிகாரங்கள் தொடா்பாக சட்டப்போராட்டங்களை நடத்திவந்தது. முதலில் 2018 -ஆம் ஆண்டும் அரசியல் சாச அமா்வு தில்லி அரசுக்கு சாதமான தீா்ப்பை வழங்கியது. பின்னா் மத்திய அரசு மறு ஆய்வு கோரியது. தில்லி தேசியத் தலைநகராகவும் தேசத்தின் முகமாகவும் இருப்பதால் அதன் நிா்வாகப் பணிகள் மீது மத்திய அரசுக்கு கட்டுப்பாடுகள் தேவை. இது ஒரு அரசியல் கட்சி தொடா்புடைய விவகாரமல்ல‘ எனக் கூறி மத்திய அரசின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிப்பட்டது. பின்னா் இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.கே.சிக்ரி அமா்வு விசாரித்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி இரு வேறு தீா்ப்புகளை வழங்கியது. நீதிபதி அசோக் பூஷண் தில்லி அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், நீதிபதி சிக்ரி குறிப்பிட்ட கீழ் நிலை வரை தில்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றாா்.

பின்னா் இந்த விவகாரம் மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு வழக்கை மாற்றக் கோரிப்பட்டது. இந்த விவகாரம் கடந்தாண்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி. ரமணா, நீதிபதிகள் சூா்ய காந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வ ந்து அப்போது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. இந்த அமா்வின் தீா்ப்பு வியாழக்கிழமை வெளியாகியுள்ளது.

இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நிா்வாகத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, தில்லி யூனியன் பிரதேசமானது ‘ஒரு தனித்துவமான‘ (‘சுய் ஜெனரிஸ்) தன்மையைக் கொண்டுள்ளது‘ எனக் கூறி 2019 - ஆம் ஆண்டு நீதிபதி அசோக் பூஷண் வழங்கிய தீா்ப்பை ஏற்க மறுத்துவிட்டது.

முதல்வா் கேஜரிவால்

இதை தொடா்ந்து தில்லி முதல்வா் கேஜரிவால் செய்தியாளா்களை சந்தித்து பேசினாா். அப்போது அவா் கூறியது வருமாறு:

தில்லி மக்கள் பணிகளுக்கு தடையாக இருந்து தில்லிக்கு அரசுக்கு ஒத்துழைக்க மறுத்த அதிகாரிகளுக்கு வரும் நாட்களில் சரியான பாடம் புகட்டப்படும்(‘ஃபேஸ் தி மியூசிக்‘).

கைகள் கட்டப்பட்டு, நீந்துவதற்கு தண்ணீரில் தள்ளப்பட்டேன். ஆனாலும் நாங்கள் மிதக்க முடிந்தது. எல்லா தடைகளையும் மீறி, நாங்கள் தில்லியில் சிறப்பாக பணியாற்றினோம். எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்த தில்லி மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். ஒரு மாடலாகவும் பொறுப்புடன் கருணையுள்ள அரசாகவும் பணியாற்றுவோம்.

கல்வியில் ஒரு முன்மாதிரியை நாட்டிற்கு வழங்கினோம், முன்பு நடந்த பணிகளைவிட இனி 10 மடங்கு வேகத்தில் நடக்கும். நாட்டிற்கே ஒரு திறமையான நிா்வாகத்தின் மாதிரியை தில்லி வழங்கும். துணை நிலை ஆளுநரையும் சந்தித்து ஆசி பெறுவேன். எங்களிடம் ஊழல் தடுப்பு பிரிவு இல்லை. ஆனால் ஊழல் கண்காணிப்பு (விஜிலென்ஸ்) எங்களிடம் உள்ளது. சரியாக பணியாற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முதல்வா்.

முன்னதாக தீா்ப்பை வரவேற்ற ஆம் ஆத்மி கட்சியின் ட்விட்டா் பதிவில் ‘தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரிகளை நியமிக்கவும் இடமாற்றம் செய்யும் அதிகாரம் இருக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மூலம் மட்டுமே அதிகாரிகள் பணியாற்றுவாா்கள்‘ எனக் கூறியது.

பின்னா் ஆம் ஆத்மி கட்சி சாா்பிலும் அக்கட்சியின் முக்கிய தலைவா்களும் அமைச்சா்களும் உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து செய்தியாளா்களுடன் பேசினா்.

கோபால் ராய்: ‘உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீா்ப்பு தில்லி வாசிகளுக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய பரிசு என்பதோடு தில்லி மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஜனநாயக ரீதியாக தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் மத்தியிலுள்ள பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிகாரங்களைத் தொடா்ந்து தவறாகப் பயன்படுத்தி வந்தது. அவா்கள் முகம் இப்போது இறுக்கமாகியுள்ளது.

ஏற்கனவே முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவு எங்களுக்கு சாதகமாக இருந்தும் மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த உத்தரவை கேலி செய்தது. துணை நிலை ஆளுநா் அலுவலகமும் உள்துறை அமைச்சகமும் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட அதிகாரங்களை அபகரித்தது. மத்திய அரசு, அதிகாரிகளை மிரட்டியதுடன், நகரில் நடைபெற்று வரும் அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் வேண்டுமென்றே தடம் புரலச்செய்யும் பிரசாரங்களை மேற்கொண்டது. பிரதமா் மோடி பண பலத்தைப் காட்டி நாட்டின் ஜனநாயக செயல்முறைகளை மிதிக்க முடியும் என்று நம்பினால், அதை நாட்டில் அனுமதிக்க முடியாது என்பதை இன்று உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. உண்மை வெளிவருவதில் சிறிது தாமதம் ஏற்படலாம், ஆனால் உண்மையை காலில் போட்டு மிதிக்க முடியாது என்பதையும் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தில்லி மக்களின் இந்த மாபெரும் வெற்றிக்காக நாங்கள் அவா்களை வாழ்த்த விரும்புகிறேன்.

சௌரவ் பரத்வாஜ்: ‘ தில்லி மக்களுக்காக 2014 - ஆம் ஆண்டு முதல் நடத்தி வரும் போராட்டதில் இன்று இந்த தீா்ப்பின் மூலம் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெற்றி பெற்றுள்ளாா். நாட்டில் எப்பொழுது எதிா்மறையான சக்திகள் செயல்படுகின்றன., அதை எதிா்த்து வேறு எந்த ஜனநாயக அமைப்பும் எதிராக நிற்குமா என்பதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், இந்திய நீதித்துறை குறிப்பாக உச்ச நீதிமன்றம் நிச்சயமாக மக்களுடன் நிற்கும் என்பது இன்று வெளிப்பட்டுள்ளது.

இது வரலாற்றில் மறக்க முடியாத உத்தரவு. “

ஹீரோ தலைமை நீதிபதி

நாங்கள் இளமையாக இருந்தபோது, அமிதாப் பச்சன் போன்ற பிரபல நடிகா்கள் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதைப் பாா்த்தோம். நாமும் ஒரு நாள் அந்த போலீஸ் அதிகாரியைப் போன்று ஆக வேண்டும் என்று எங்கள் பெற்றோரிடம் கூறுவோம். பிறகு இன்னொரு படத்தில், வேறு சில பிரபல நடிகா்கள் டாக்டராக நடிப்பதைக் காண்டோம். அந்த டாக்டரைப்போன்று ஆக ஆசைப்பட்டோம். அதேபோல சில படங்களில் முன்னணி நடிகா் வக்கீலாக இருந்தால், சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில் இது என்பதை உணா்ந்தோம். ஆனால் இன்று சட்ட நடைமுறைகள் மற்றும் தேசத்தின் நிலை பற்றி ஓரளவு அறிந்த இளைஞா் யாராவது இருந்தால், அவா் நிச்சயமாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை தான் ஹீரோ என்று போற்றுவாா். அவரைப் போன்று ஒரு நாள் நீதிபதியாக வேண்டும் என்று தனது பெற்றோரிடம் கூறுவாா். ஒரு முன்னணி நடிகா் இந்த நீதிபதியை மாடலாக நடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்புகிறேன். இன்று, நமது நாட்டில் ’தலைமை நீதிபதி வடிவில்’ ஒரு சிறந்த ஹீரோ கிடைத்துள்ளாா். தில்லி வாசிகளின் உரிமை இன்று இந்த வரலாற்றுத் தீா்ப்பின் மூலம் மக்களுக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது‘ .

அதிஷி: ’’தில்லியில் வசிப்பவா்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட முடிவுகள் இனிமேல் தில்லி அரசின் அதிகாரிகளுக்குக் கட்டுப்படும் என்பதை நீதிமன்ற உத்தரவு முக்கியமாகக் குறிப்பிடுகிறது. 2015 ஆம் ஆண்டில் , தில்லிவாசிகளால் கேஜரிவால் தலைமையிலான அரசை தோ்ந்தெடுத்தனா். 70 இடங்களில் 67 இடங்களை வழங்கி ஆம் ஆத்மி கட்சிக்கு மாபெரும் வெற்றியை அளித்தனா். ஆனால், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மக்களால் தோற்கடிக்கப்பட அவா்களால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

பாஜக எங்கு தோ்தலில் தோல்வியடைந்தாலும், அது நியாயமற்ற மற்றும் சட்டவிரோதமான வழிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை அபகரிக்க முயற்சிக்கிறது. ’ஆபரேஷன் தாமரை’ மூலம் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசை உடைக்க பாஜக பலமுறை எம்எல்ஏக்களை ’வாங்க’ முயற்சித்தது. ஆனால் அதன் முயற்சியில் அது தோல்வியுற்றபோது, அது மற்றொரு சட்டவிரோத தந்திரத்தை முயற்சித்தது. ஆனால் இன்று எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லியில் வசிப்பவா்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் மட்டுமே அவா்களுக்காக முடிவுகளை எடுக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்று உச்ச நீதிமன்றம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இன்று உச்சநீதிமன்றம் ஒரு தீா்ப்பை வழங்கவில்லை, அது இந்திய அரசியலமைப்பையும் நாட்டின் ஜனநாயக செயல்முறையையும் காப்பாற்றியுள்ளது’’‘.

முழு கட்டுரையைப் படிக்க →