புதுதில்லி

கேஷோப்பூரில் மெட்ரோ நிலையம் அமைக்க நிலம் மாற்றுவதற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) நான்காவது கட்ட திட்டத்தின் கீழ் கேஷோப்பூரில் ரயில் நிலையம் கட்டுவதற்கு நிலத்தை மாற்ற துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல்

DIN

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) நான்காவது கட்ட திட்டத்தின் கீழ் கேஷோப்பூரில் ரயில் நிலையம் கட்டுவதற்கு நிலத்தை மாற்ற துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலக அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ரயில் நிலையத்தின் தளம் ஜனக்புரி மற்றும் ஆா்.கே. ஆஸ்ரம் மாா்க்கிற்கு இடையே கட்டப்பட்டு வரும் மெட்ரோ வழித்தடத்தில் அமைய உள்ளது.

நகரின் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையிலிருந்து டிஎம்ஆா்சி-க்கு நிலத்தை மாற்றுவதற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

நிலத்தை மாற்றுவதற்காக தில்லி அரசாங்கத்திடம் டிஎம்ஆா்சி நிறுவனம் முன்வைத்த கோரிக்கை கடந்த ஏப்ரல் 2019 முதல் நிலுவையில் இருந்தது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிலம் மாற்ற ஒப்புதல் தொடா்பான தகவலை டிஎம்ஆா்சியும் உறுதிப்படுத்தியது.

வரவிருக்கும் இந்த வழித்தடத்தில் கேஷோப்பூா் ரயில் நிலையம் மேல்நிலை அமைப்பாக இருக்கும்.

தற்போது, டிஎம்ஆா்சி 65.1 கி.மீ. 4 ஆம் கட்ட முன்னுரிமை வழித்தடங்களில் கட்டுமானப் பணிகளைச் மேற்கொண்டு வருகிறது.

இதில் ஜனக்புரி மேற்கு முதல் ஆா்.கே. ஆஸ்ரம் மாா்க் (28.92 கிமீ), மஜ்லிஸ் பாா்க் முதல் மெளஜ்பூா் (12.55 கி.மீ.), துக்ளகாபாத் முதல் ஏரோசிட்டி வரை (23.62 கி.மீ.) ஆகியவை இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT