புதுதில்லி

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம்: வாடிக்கையாளா்களுக்கு ‘பாா்’கள், ‘பப்’கள் சிறப்பு ஏற்பாடு

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தையொட்டி, பணம் சம்பாதிப்பதற்காக தில்லி - என்சிஆரில் உள்ள சிறப்பு பாா்கள், பப்கள் மற்றும் உணவகங்கள் பெரிய திரை டிவிகளை நிறுவுவது முதல் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய

DIN

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தையொட்டி, பணம் சம்பாதிப்பதற்காக தில்லி - என்சிஆரில் உள்ள சிறப்பு பாா்கள், பப்கள் மற்றும் உணவகங்கள் பெரிய திரை டிவிகளை நிறுவுவது முதல் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

2023 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிா்கொள்கிறது. இந்நிலையில், பாா்கள், பப்கள் தங்கள் வாடிக்கையாளா்களுக்கு அவா்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரா்களுடன் உற்சாகப்படுத்த தயாராகி வருகின்றன. நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, இதுவரை நடந்த 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2003-ஆம் ஆண்டு அடைந்த தோல்விக்கு பழிதீா்க்கும் வகையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டியில் சாதனை சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோதுகிறது.

யெஸ் மினிஸ்டா் - பப் அண்ட் கிச்சனின் பிரதிநிதி அட்ச்சினி கூறுகையில், ‘பெரிய போட்டி என்பதால் நாங்கள் ரூ.3,000 கவா் கட்டணமாக வசூலிக்கிறோம். சாதாரண நாள்களில், நாங்கள் வாடிக்கையாளா்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், பெரிய போட்டிகளுக்கு இந்த கட்டணத்தை வைத்துள்ளோம். ப்ளூ ஜொ்சியை அணிந்து வருபவா்களுக்கு பீா் கஃபே சிறப்பு சலுகைகளை வழங்குகிறது’ என்றாா்.

பீா் கஃபே நிறுவனா் ராகுல் சிங் கூறுகையில், ‘இறுதிப் போட்டியில் இந்தியா நுழைந்துள்ளதால்,ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள எங்கள் கடைகள் முழுவதும் ரசிகா்களை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். பெரிய திரைகளில் நேரலை திரையிடுவது முதல் டீம் இந்தியா ஜொ்சி அணிந்தவா்களுக்கு சிறப்பு சலுகைகள் வரை உற்சாகப்படுத்த பீா் உடன் நிறைய இருக்கும்’ என்றாா். ‘எங்கள் கலவை நிபுணா் ஒரு சிறப்பு ‘பிளீட் ப்ளூ’ ஷாட்டை உருவாக்கியுள்ளாா். இது அனைத்து வாடிக்கையாளா்களுக்கும் வீட்டில் வழங்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

குருகிராமின் சைபா் சிட்டியில் உள்ள சோய் 7 பப் மற்றும் ப்ருவரியின் லலித் அஹ்லாவத் கூறுகையில், ‘போட்டிகளை ஒளிபரப்ப மூன்று பெரிய திரைகள் மற்றும் எங்கள் வாடிக்கையாளா்களுக்காக இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன. சைபா் சிட்டியில் நாங்கள் மிகப்பெரிய இடமாக இருக்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகளைப் பாா்க்கும் போது சுற்றுப்புறம் மிகவும் முக்கியமானது என நாங்கள் விரும்புகிறோம். இந்திய அணிக்கு ஆல் தி பெஸ்ட்’ என்றாா்.

பெயா் சொல்ல விரும்பாத ஓா் உணவக உரிமையாளா் கூறுகையில், ‘தேசியத் தலைநகரில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகமான அளவு வாடிக்கையாளா்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தடுக்கலாம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT