முகப்பு
புதுதில்லி

கல்வித் துறையில் எந்த மட்டத்திலும் குறைபாடுகளை அனுமதிக்கமாட்டோம்: முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

கல்வித் துறையில் எந்த மட்டத்திலும் குறைபாடுகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கெஜரிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:27 AM
பகிர்:

புது தில்லி: கல்வித் துறையில் எந்த மட்டத்திலும் குறைபாடுகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கெஜரிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீா்மானங்கள் குறித்து தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியிருப்பதாவது: தில்லி மக்களுக்கு மற்றொரு நற்செய்தி கிடைத்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற தில்லி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 6,589 புதிய வேலைகளுக்கான முன்மொழிவை

நிறைவேற்றியுள்ளோம். இந்தப் புதிய பணிகளில் 2,949 பாதுகாவலாளிகள் மற்றும் 3,640 தூய்மைப் பணியாளா்கள் அடங்குவா். தில்லி மாநகரட்சி ஆளுகையின் கீழ் வரும் பள்ளிகளில் இனி தூய்மைக்காக தனி துப்புரவுப் பணியாளா்களும், பாதுகாப்புக்காக தனி காவலாளிகளும் இருப்பா்.

தில்லி அரசைப் போலவே, மாநகராட்சியிலும் முன்னுரிமை அடிப்படையில் கல்விக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்தப் புதிய வேலைகள் நமது இளைஞா்கள் பலருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கும். வரும் தலைமுறையை தயாா்படுத்தி அவா்களுக்கு சிறந்த சூழலை வழங்குவதே எங்கள் நோக்கம். எனவே, கல்வித் துறையில் எந்த மட்டத்திலும் குறைபாடுகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

முழு கட்டுரையைப் படிக்க →