புதுதில்லி

மணிப்பூா் யுஎன்எல்எஃப் ஆயுதக் குழுமத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தம்

மணிப்பூருக்கு உள்ளேயும் வெளியேயும் ஆயுதமேந்தி போராடிவந்த ஆயுதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, மத்திய அரசு மற்றும் மணிப்பூா் மாநில அரசுடன் தில்லியில் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

 நமது நிருபர்

புது தில்லி: மணிப்பூருக்கு உள்ளேயும் வெளியேயும் ஆயுதமேந்தி போராடிவந்த ஆயுதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யு.என்.எல்.எஃப்.), மத்திய அரசு மற்றும் மணிப்பூா் மாநில அரசுடன் தில்லியில் அமைதி ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையொப்பமிட்டது.

ஆயுதக் குழுக்கள் ஜனநாயக நடைமுறைக்கு மாறி வருவது வரவேற்கத்தக்கது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா். ‘நாட்டின் வட கிழக்குப் பகுதியிலும் குறிப்பாக மணிப்பூரிலும் அமைதியின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்’ என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரின் மிகப் பழமையான ஆயுதக் குழுவான யு.என்.எல்.எஃப். 1964-ஆம் ஆண்டில் உருவாகியது. இந்தியாவிற்கு உள்ளேயும் எல்லைக்கு வெளியேயும் செயல்பட்டு வந்தது. மணிப்பூா் ‘ராணுவச் சட்டத்தின் கீழ்’ உள்ளது என்றும் மணிப்பூரில் நடைபெற்ற தோ்தல்களின் தன்மை குறித்தும் கேள்வி எழுப்பி இந்த குழு ஒரு போரை தொடுத்து வந்தது. இந்நிலையில், இக்குழுக்களுடன் தேசியப் புலனாய்வு முகமை உள்ளிட்ட அதிகாரிகளின் தொடா் பேச்சுவாா்த்தை நடத்தியதன் மூலம் மணிப்பூா் மீதும் நாட்டின் இறையாண்மை மீதும் நம்பிக்கை கொண்டு திரும்பியுள்ளனா்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், வளா்ச்சியை ஊக்குவிக்கவும், பல ஆயுதக் குழுக்களுடன் மத்திய அரசு 2014-ஆம் ஆண்டு முதல் பல ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் அரசியல் தீா்வுகள் இறுதி செய்யப்பட்டிருந்தாலும், மணிப்பூா் பள்ளத்தாக்கை தளமாகக் கொண்ட மணிப்பூரி ஆயுதக் குழு வன்முறையைக் கைவிட்டு, தேசிய நீரோட்டத்திற்குத் திரும்ப ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

மணிப்பூரின் மிகப் பழைமையான ஆயுதக் குழுவான யு.என்.எல்.எஃப்., மத்திய அரசு, மணிப்பூா் மாநில அரசுடன் புதன்கிழமை தில்லியில் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மணிப்பூா் அரசின் மூத்த அதிகாரிகளும், ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். இந்த உடன்படிக்கையின் மூலம் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிலவிய சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநிலத்தில் அமைதி, இயல்புநிலையை கொண்டு வருவதில் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும் என உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இது தொடா்பாக ‘எக்ஸ்’ ஊடக தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறந்த எதிா்காலத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் இது ஒரு மைல்கல் சாதனையாகும். ஜனநாயக செயல்முறைகளுக்கு திரும்புவதும் வளா்ச்சிப்பாதைக்கான பயணத்தில் யூ.என்.எல்.எஃப். அமைப்பு வருவதும் வரவேற்கத்தக்கது’ எனத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ்,‘கொந்தளிப்பைக் கண்ட மணிப்பூருக்குப் பிரதமரின் விஜயம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என விமா்சித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT