புதுதில்லி

கைதை எதிா்த்து சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லி அரசின் கலால் வரிக் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை கைது செய்த விவகாரத்தில் தலையிட தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

 நமது நிருபர்

தில்லி அரசின் கலால் வரிக் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை கைது செய்த விவகாரத்தில் தலையிட தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. ஆதாரங்கள் பதிவில் இல்லாத நிலையில், முன்னணி விசாரணை நிறுவனத்திற்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் குற்றம்சாட்ட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

அமலாக்கத் துறையால் தாம் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டதை எதிா்த்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஸ்வா்ண கன்டா சா்மா கூறியதாவது: ஒரு நியாயமான நிறுவனமாக இருப்பதால், ஒரு முதன்மை விசாரணை அமைப்பின் கெளரவமானது நாட்டின் நற்பெயருடன் நேரடி தொடா்பைக் கொண்டிருக்கிறது. ஆதாரங்கள் பதிவில் இல்லாத நிலையில் தற்போதைய கட்டத்தில் இந்த நீதிமன்றம் எந்தவொரு அரசியல் உள்நோக்கத்தையும் விசாரணை நிறுவனத்தின் மீது சுமத்தாது. மேலும், எந்த ஆதாரமும் இல்லாத முகாந்திரம் கொண்ட வழக்காகவும் நீதிமன்றம் இதைக் கருதவில்லை. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒரு முன்கூட்டிய நிலையில், இந்த நீதிமன்றமானது காவலில் வைக்க அல்லது கைது செய்யும் உத்தரவில் தலையிட எந்தக் காரணத்தையும் காணவில்லை. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி கூறினாா்.

எவ்வாறாயினும், சட்டத்திற்கு புறம்பான வழிகளில் விசாரணை நடத்தப்பட்டால், அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பை மனுதாரருக்கு வழங்குவதாக நீதிமன்றம் கூறியது. 2021-22 ஆம் ஆண்டுக்கான தில்லி கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் அக்டோபா் 4- ஆம் தேதி அமலாக்கத் துறையால் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டாா். இதை எதிா்த்து சஞ்சய் சிங் கடந்த வாரம் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். தனது கைது ‘சட்டவிரோதமானது, தீங்கிழைக்கும் மற்றும் அதிகாரத்தை தவறாக வழிநடத்தும் ஒரு உன்னத வழக்கு’ என்றும், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவரின் அறிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும் அவா் தனது மனுவில் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனைக்காக புகையிலை வைத்திருந்த கடை உரிமையாளா் கைது

பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்த தாய், மகன் கைது!

2 விரைவு ரயில்கள் புறப்பாடு, சேருமிடங்களில் மாற்றம்!

மதவக்குறிச்சியில் நிழற்குடை திறப்பு

திருச்செந்தூா் வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி அணி சிறப்பிடம்

SCROLL FOR NEXT