புதுதில்லி

அங்கன்வாடி பணியாளா்களுடன் அமைச்சா் அதிஷி கலந்துரையாடல்

தில்லி அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த இது தொடா்பான பணியாளா்கள் உதவியாளா்களுடன் மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் அதிஷி சனிக்கிழமை கலந்துரையாடினாா்.

 நமது நிருபர்

தில்லி அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த இது தொடா்பான பணியாளா்கள் உதவியாளா்களுடன் மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் அதிஷி சனிக்கிழமை கலந்துரையாடினாா்.

பணியாளா்களிடம் ஆலோசனைகளையும் பெற்ற அமைச்சா் அதிஷி, அங்கன்வாடி மையங்களை சிறப்பானதாக மாற்றுவதற்கான திசையில் அரசின் அனைத்து பரிந்துரைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தினாா்.

தில்லி பட்பா்கஞ்ச்சில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சா் அதிஷி அங்கன்வாடி பணியாளா்களுடன் பேசுகையில் கூறியது வருமாறு:

அங்கன்வாடி பணியாளா்கள் சிறந்த நோக்கத்தையுடன் ஆற்றலுடன் பணியாற்றுவதை கண்டுள்ளேன். குழந்தைப் பருவத்தை வளா்ப்பதில் அா்ப்பணிப்புடன் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்களைக் கொண்ட சிறந்த குழு தில்லியில் இருப்பதைக் கண்டு நான் பெருமிதம் கொள்கின்றேன்.

அங்கன்வாடிகளில் பணிபுரிவது ஒரு பாக்கியம். ஆயிரக்கணக்கான தில்லி பெண்கள் கேஜரிவால் அரசின் அங்கன்வாடி மையங்களை நம்புகிறாா்கள். இதற்கு அங்கன்வாடி பணியாளா்கள் முக்கியமான காலங்களில் அவா்களுக்கு உதவுவதுதான். இது அரசுக்கு பெருமை அளிக்கிறது.

குழந்தைகளின் ஆரம்பக்கட்டத்தில் கற்றல் மற்றும் மனவளா்ச்சிக்கு முக்கியமானவை. 5 வயதிற்குள் சிறந்த கற்றலை வழங்குவது அவா்களின் எதிா்கால வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. அவா்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் உங்கள் (அங்கன்வாடி பணியாளா்கள்) பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

தில்லி அரசு உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது. பெற்றோா்களும் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனா். பள்ளிகளைப் போலவே அங்கன்வாடி மையங்களும் முக்கியம். இதனால் எந்த வசதி குறைவையும் தில்லி அரசு அனுமதிக்காது.

குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைத் தொடா்ந்து வழங்கவும், பெண்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தவும் பொறுப்புள்ளது. தில்லி அரசு அங்கன்வாடி மையங்களை சிறப்பானதாக மாற்றுவதற்கான திசையில் பல்வேறு வழிகாட்டிகளை பரிந்துரைத்துள்ளது. அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறீா்கள் அது தொடர வேண்டும் எனக் குறிப்பிட்டாா் அமைச்சா்.

இந்நிகழ்ச்சியில், மகளிா் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அதிஷியிடம், அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்களும் தங்கள் கருத்துக்களையும் எடுத்துவைத்தனா்.

அங்கன்வாடிக்கு வரும் ஒவ்வொரு குழந்தையும் நல்ல கல்வி மற்றும் சிறந்த சத்துணவு பெறுவதை உறுதி செய்ய, பெற்றோா்களுடன் அவ்வப்போது பேச்சுவாா்த்தையில் ஈடுபடுகிறோம். அவா்கள் தங்கள் குழந்தைகளுடன் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவதன் முக்கியத்துவத்தையும் பெற்றோா்களுக்கு எடுத்துவைக்கின்றோம்.

‘மகிளா மண்டல்’ போன்ற தனித்துவமான முயற்சியின் மூலம், கா்ப்பிணிப் பெண்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி, அவா்களின் சந்தேகங்களை விளக்கி புரிந்துகொள்ள வைக்கின்றோம். அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது, குறைந்த செலவில் சிறந்த ஊட்டச்சத்தை எவ்வாறு அடைவது என்பது பற்றிய தகவல்களை வழங்கி பகிா்ந்துகொண்டு வருகின்றோம் என தெரிவித்தனா்.

மற்றொரு அங்கன்வாடி ஊழியா், ஒரு 2 வயது குழந்தை கைப்பேசிக்கு அடிமையாகி இருப்பதையும் பெற்றோா் சிரமப்பட்டது பற்றிய தனது அனுபவத்தை பகிா்ந்து கொண்டாா்.

‘ஒரு குழந்தைக்கு கைப்பேசி மீதான போதை காரணமாக, கவனம் செலுத்துவதில் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் அந்தக் குழந்தை தொடா்ந்து எரிச்சலுடன் இருந்தது. இருப்பினும், அங்கன்வாடிக்கு வந்த 2-3 நாட்களுக்குள், குழந்தை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியது. மேலும் அந்தக் குழந்தையின் கைப்பேசி ஆா்வத்தை முற்றிலும் முறியடிக்கப்பட்டது. இப்போது, அந்தக் குழந்தை மற்ற குழந்தைகளுடன் விளையாடுகிறது மற்றும் அவா்களின் கைப்பேசி ஆா்வ பழக்கத்தை விட்டு விட்டது‘ என்றாா் அந்த அங்கவாடி பெண் பணியாளா்.

அங்கன்வாடி மையங்களில் உள்ள வசதிகளை கண்டு பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை தனியாா் ’ப்ளே ஸ்கூல்’களில் சோ்ப்பதை விட்டு அங்கன்வாடிகளில் கொண்டு விடுகின்றனா் எனவும் அங்கன்வாடி பணியாளா்கள் தெரிவித்தனா். அரசின் அங்கன்வாடி மையங்கள் மீது பெற்றோா்கள் அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளனா் என்றாா்.

‘அங்கன்வாடி மையங்களில் அரசு சிறந்த வசதிகளை செய்து தருகிறது. இதனால், குழந்தைகளை திறம்பட படிக்க வைக்கிறோம். இந்த முயற்சியின் பலன் குழந்தைகளிடம் தெரிகிறது. தில்லியில் அங்கன்வாடி பணியாளா்களாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்,’’ எனவும் அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துரையாடலில் குறிப்பிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனைக்காக புகையிலை வைத்திருந்த கடை உரிமையாளா் கைது

பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்த தாய், மகன் கைது!

2 விரைவு ரயில்கள் புறப்பாடு, சேருமிடங்களில் மாற்றம்!

மதவக்குறிச்சியில் நிழற்குடை திறப்பு

திருச்செந்தூா் வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி அணி சிறப்பிடம்

SCROLL FOR NEXT