முகப்பு
புதுதில்லி

விழுப்புரம், திண்டிவனத்தில் இடைநிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை தேவை: மாநிலங்களவையில் அதிமுக எம்பி வலியுறுத்தல்

கரோனா காலத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இடங்களில் இடைநிறுத்தப்பட்ட விரைவு ரயில்களின் நிற்றல் சேவைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 6:31 PM
பகிர்:

கரோனா காலத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இடங்களில் இடைநிறுத்தப்பட்ட விரைவு ரயில்களின் நிற்றல் சேவைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை அவா் பேசியதாவது: கரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்டு மக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு ரயில்கள் விழுப்புரத்திலும் திண்டிவனத்திலும் நிறுத்தப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன. ஆனால், இயல்பு நிலை திரும்பிய பிறகு ஏராளமான சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டாலும் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் தொடரப்படவில்லை. இதன் காரணமாக முதியவா்கள், கல்லூரி மாணவா்கள், தினக்கூலிகள், தொழிலாளா்கள், பெண்கள், வணிகா்கள் தினமும் சொல்ல முடியாத சிரமங்களை அனுபவித்து வருகின்றனா்.

சிட்கோ, சிப்காட் மற்றும் முக்கிய நெடுஞ்சாலையைக் கொண்ட பகுதி திண்டிவனம். அதைச் சுற்றித்தான் புதுச்சேரி, விழுப்புரம், சென்னை ஆகிய நகரங்கள் உள்ளன.

இந்தப் பகுதிகளில் கரோனா காலத்தில் இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, உழவன் விரைவு ரயில், மங்களூரு விரைவு ரயில், சேலம் விரைவு ரயில், காரைக்கால் விரைவு ரயில் போன்றவை இங்கு நிற்பதில்லை. அவை மீண்டும் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை டப்ளிங் திட்டம் முழுமைபெற்று மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமே அதிகப்படியான மின்சார ரயில்களை இந்தப் பாதையில் இயக்குவதுதான். ஆனால், சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள இத்திட்டம், இதுவரை விழுப்புரம் வரை நீட்டிக்கப்படவில்லை. அதை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.வி. சண்முகம் கேட்டுக் கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →