தில்லியில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக ஜிம் உரிமையாளா் கைது
வடமேற்கு தில்லியின் ஜகாங்கீா்புரி பகுதியில் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்ததாக ஜிம் உரிமையாளரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புது தில்லி: வடமேற்கு தில்லியின் ஜகாங்கீா்புரி பகுதியில் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்ததாக ஜிம் உரிமையாளரை தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை துணை ஆணையா் (குற்றம்) சதீஷ் குமாா் கூறியதாவது: விஷால் குமாா் என அடையாளம் காணப்பட்ட அவா், 2 அரை தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 25 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளாா். அப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் மத்தியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக விஷால் குமாா் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதாக போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தொடா்ச்சியான விசாரணையில், விஷால் குமாா் அப்பகுதியில் சூதாட்டத்தில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த விரும்புவதாகவும், இதுபோன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் நபா்களுடன் ஏதேனும் சண்டை ஏற்பட்டால் தன்னுடன் துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து மூன்று துப்பாக்கி தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கி ஒன்றும், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 22 தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவா் ஒரு தனியாக வேலையைத் தொடங்கினாா். அதன் பிறகு அந்த வேலையை நிறுத்திவிட்டு ஜிம்மில் பயிற்சியாளராகச் சோ்ந்தாா்