தில்லியில் சுத்திகரிக்கப்படாத திடக் கழிவுகள் பொது சுகாதார அவசரநிலைக்கு வித்திடும்: உச்சநீதிமன்றம் கவலை
தில்லியில் நாளொன்றுக்கு 3,000 டன்னுக்கு மேல் உருவாகும் சுத்திகரிக்கப்படாத திடக் கழிவுகள் பொது சுகாதார அவசரநிலைக்கு
தில்லியில் நாளொன்றுக்கு 3,000 டன்னுக்கு மேல் உருவாகும் சுத்திகரிக்கப்படாத திடக் கழிவுகள் பொது சுகாதார அவசரநிலைக்கு
வழிவகுக்கும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.
தேசிய தலைநகரில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் மோசமாக செயல்படுத்துவது குறித்து கவலை தெரிவிக்கையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
‘வருந்தத்தக்க நிலை‘ குறித்து தில்லி மாநகராட்சியை (எம்சிடி) கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம், ‘தேசிய தலைநகா் ஒரு நாளைக்கு 11,000 டன் திடக்கழிவுகளை உருவாக்குகிறது. அதே நேரத்தில் மாநகராட்சியிடம் உள்ள சுத்திகரிக்கப்படும் ஆலைகளின் தினசரி கொள்திறன் 8,073 டன்கள் மட்டுமே உள்ளது’ எனக் கூறியது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு, எம்சிடியின் பிரமாணப் பத்திரத்தின்படி, தில்லியில் தினசரி உருவாகும் 11,000 டன் திடக்கழிவுகளை கையாள்வதற்கு 2027-ஆம் ஆண்டு வரையிலும்கூட
சுத்திகரிப்பு வசதிகளை உருவாக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டது.
திடக்கழிவு மேலாண்மை தொடா்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு ‘அமிகஸ் க்யூரி’ ஆக உதவிய மூத்த வழக்குரைஞா் அபராஜிதா சிங், நீதிபதிகள் அமா்விடம் கூறுகையில், ‘இந்திய மற்றும் வெளிநாட்டு இதழ்களில் நாட்டில் மக்கள் மாசுபாடுகளால்
இறப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதால் பொது சுகாதார அவசரநிலைக்கு இட்டுச் செல்லக்கூடும்’ என்றாா்.
அதற்கு நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘‘நாங்கள் இதைப் பற்றி கவலைப்படுகிறோம். தலைநகரில், இது 2016 விதிகளின் விவகாரங்கள்படி இங்கு நாள் ஒன்றுக்கு 3,000 டன்களுக்கு மேல் சுத்திகரிக்கப்படாத திடக் கழிவுகளை உருவாக்குகிறோம். மேலும் இது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும்.
“எம்சிடியின் பிரமாணப்பத்திரத்திரைப் படித்துப் பாா்க்கும்போது, சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருப்பதாக நாங்கள் பாா்க்கவில்லை. மேலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுக்கள் கடைப்பிடிக்கப்படுவதாக கருதினால், தில்லியில் 2027 வரைகூட (கூடுதல் சுத்திகரிப்பு) வசதிகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அப்போது, ஒவ்வொரு நாளும் 11,000 டன் திடக்கழிவுகளை சமாளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
அதற்குள் திடக்கழிவு உற்பத்தி பல மடங்கு பெருகும் என்று கூறுவதற்கு ஊகிக்க வேண்டிய அவசியமில்லை.
இது பொது சுகாதார அவசரநிலைக்கு வழிவகுக்கும் என்று அமிகஸ் கியூரி கூறுவதுடன் நாங்கள் உடன்படுகிறோம்.
தலைநகரில் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 ஐ செயல்படுத்தும்போது இது ஒரு வருந்தத்தக்க நிலையாகும்.
இந்தப் பிரச்னைக்கு உடனடித் தீா்வு காண்பதற்காக எம்சிடி மற்றும் தில்லி அரசாங்கத்தின் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளருக்கு
உத்தரவிடுகிறோம்.
2016 விதிகளுக்கு இணங்காதது தில்லியில் தீவிரமான அவசரநிலையை உருவாக்காமல் இருப்பதை உறுதிசெய்ய எடுக்கப்படக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை செயலாளா் சமா்ப்பிக்க வேண்டும்.
வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகம் சாா்பிலும் தனியாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் தொடா்பான ரூ.5 கோடிக்கு மேலான கட்டணங்கள் மற்றும் ஏஜென்சி ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்க, மாநகராட்சிக்கு நிதி அதிகாரத்தை வழங்க எம்.சி.டி. தில்லி அரசை அணுகியுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை மட்டுப்படுத்தும்
ஜூலை 10-ஆம் தேதியிட்ட முன்மொழிவை தில்லிஅரசு உடனடியாக பரிசீலித்து மூன்று வாரங்களுக்குள் தகுந்த முடிவை எடுக்க
வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
தேசியத் தலைநகா் வலயம் குருகிராம், ஃபரீதாபாத் மற்றும் கிரேட்டா் நொய்டாவில் நிலவிவரும் திடக் கழிவு மேலாண்மை விவகாரத்தையும் உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, அங்கு நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறியது.
குருகிராமில் நாள் ஒன்றுக்கு 1,200 டன் திடக்கழிவு உற்பத்தியாகிறது. ஆனால் தினசரி செயலாக்க திறன் 254 டன் மட்டுமே என்று அமா்வு குறிப்பிட்டது.
ஃபரீதாபாதில், திடக்கழிவுகளின் மொத்த உற்பத்தி தினமும் 1,000 டன்னாக இருப்பதாகவும், அதே நேரத்தில் செயலாக்க திறன் ஒரு நாளைக்கு 400 டன்னாக மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிட்டது.
சுகாதார அவசரநிலைக்கு வித்திடக் கூடிய இந்தப் பிரச்னையைக் கையாளவும், தீா்வு காணவும் குருகிராம் மற்றும் ஃபரீதாபாத் மாநகராட்சிகளின் ஆணையா்கள், கிரேட்டா் நொய்டா மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மற்றும் பிற அமைப்புகளின் கூட்டத்தை கூட்டுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளருக்கு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை செப்டம்பா் 6-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.