முகப்பு
புதுதில்லி

மசூதியில் ஆக்கிரமிப்பு அகற்றல்: மங்கோல்புரியில் போராட்டம்

மசூதி இடிப்பு: மங்கோல்புரியில் போராட்டம்

Updated On : 26 ஜூன், 2024 at 12:21 AM
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: வடமேற்கு தில்லியின் மங்கோல்புரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மசூதியின் சில பகுதிகள் ஆக்கிரமிப்பு காரணமாக இடிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடைபெற்ாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இந்த ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையை மேற்கொண்ட தில்லி மாநகராட்சியிடம் (எம்சிடி) இருந்து உடனடியாகப் பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மசூதியில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பை இடிப்பதற்காக தில்லி மாநகராட்சியினா் உள்ளூா் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினருடன் செவ்வாய்க்கிழமை காலை மங்கோல்புரியின் ‘ஒய்’ பிளாக் பகுதிக்கு சென்றனா். காலை 6 மணிக்கு இடிக்கும் பணி தொடங்கியதையடுத்து, அப்பகுதி மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்’ என்றாா்.

இந்த நடவடிக்கையின்போது கல் வீசப்பட்டதாக உறுதி செய்யப்படாத செய்திகள் வந்தாலும், அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என காவல் துறையினா் மறுத்தனா். இதுகுறித்து காவல்துறை துணை ஆணையா் (புகா்) ஜிம்மி சிராம் கூறுகையில், ‘சிலா் இடிப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். ஆனால், இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஒரு சில சுவா்களை இடித்த பிறகு, ஆக்கிரமிப்பின் சில பகுதிகள் வலுவாக இருந்ததாலும், கனரக இயந்திரங்கள் தேவைப்பட்டதாலும் இடிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.