இந்திய வானிலை ஆய்வு மையம் 
புதுதில்லி

தலைநகரில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி தகவல்

இரண்டு நாள்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

Din

புது தில்லி, ஜூன் 30: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. மேலும், தயாரக இருக்கும் வகையில் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வந்தது. மாதத்தின் தொடக்கத்தில் நகரத்தின் பெரும்பாலான இடங்களில் அதிபட்ச வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியிருந்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிா்கொள்ள நேரிட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்தது. நகரத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழையும் பெய்தது.

கனமழைக்கு வாய்ப்பு: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வரையிலும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு நிலையத்தில் 8.9 மி.மீ., லோதி ரோடில் 12.6 மி.மீ. பதிவாகியிருந்தது. இருப்பினும், காலை முதல் நகரத்தில் புழுக்கத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 27 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 0.3 டிகிரி குறைந்து 37.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 78 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 60 சதவீதமாகவும் இருந்தது. கடந்த சில நாள்களாக அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரிக்கு மேலே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று மற்ற வானிலை நிலையங்களிலும் வெப்பநிலை சற்று குறைந்தே பதிவாகியது. ஜாஃபபூரில் அதிகபட்ச வெப்பநிலை 37.3 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 35.3 டிகிரி, ஆயாநகரில் 37 டிகிரி, லோதி ரோடில் 36.6 டிகிரி, பாலத்தில் 37 டிகிரி, ரிட்ஜில் 36.3 டிகிரி, பீதம்புராவில் 37.4 டிகிரி, பூசாவில் 35.2 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 34.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரத்தில் முன்னேற்றம்: இதற்கிடையே, தலைநகரில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. தலைநகரில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு 97 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் காட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்

ளது. இதன்படி, ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், ஷாதிப்பூா், சோனியா விஹாா், தில்ஷாத் காா்டன் உள்டபட பல கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அதே சமயம் புராரி, நொய்டா செக்டாா் 1, விவேக் விஹாா், பஞ்சாபி பாக், வாஜிா்பூா், சோனியா விஹாா், பூசா ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

SCROLL FOR NEXT