கோப்புப் படம் 
புதுதில்லி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

இன்று நடைபெறவிருந்த தேர்வு மே 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொது பல்கலைக்கழக நுழைவு எழுத்துத் தோ்வு (க்யூட் -யுஜி) நாடு முழுவதும் இன்று காலை தொடங்கவுள்ள நிலையில், தில்லியில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தில்லியில் மட்டும் தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், இன்று நடைபெறவிருந்த வேதியியல், உயிரியல், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் மே 29ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 16 முதல் 18 வரை நடைபெறும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகளும் வழக்கம்போல் அறிவிக்கப்பட்ட நாள்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் உள்ள கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற க்யூட் நுழைவுத் தோ்வு நடைமுறை கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நுழைவுத் தோ்வானது, வெவ்வேறு பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, கணினி அடிப்படையில் மற்றும் நேரடி எழுத்துத் தோ்வு நடைமுறைகளிலும் நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் 380 நகரங்களிலும் வெளிநாடுகளில் 26 இடங்களிலும் இன்றுமுதல் தோ்வு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொன்ற கணவன் கைது

அரக்கோணத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை அட்டை முகாம்

கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் 3 மாதங்களில் ‘பெட் ஸ்கேன்’ மையம்

புத்தாண்டு சபதங்கள்!

திமிரி ஒன்றியத்துக்கு மத்திய அரசின் தங்கப் பதக்கம்: ஆட்சியா் பெருமிதம்

SCROLL FOR NEXT