முகப்பு
புதுதில்லி

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: மும்பைக்கு அழைத்துச் செல்லப்படும் பிபவ் குமாா்

Updated On : 21 மே, 2024 at 7:08 PM
பகிர்:

புது தில்லி: மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்ட தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா், அவரது வடிவமைத்த ஐபோனில் இருந்து தரவுகளைப் பெறுவதற்காக மும்பைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தில்லி முதல்வரின் இல்லத்தில் மாநிலங்களவைஸ் வாதி மலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் பிபவ் குமாா் ஐந்து நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளாா். மும்பையில் உள்ள சில நபா் அல்லது சாதனத்திற்கு தரவை மாற்றுவதற்கு முன்பு குமாா் தனது கைப்பேசியை வடிவமைத்ததாக போலீஸாா் தெரிவித்தனா். அவா் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவரது கைப்பேசி கைப்பற்றப்பட்டது. ஆனால், அது வடிவமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.