லண்டனிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட விமானம் எகிப்தில் தரையிறக்கம்!
லண்டனிலிருந்து மும்பைக்கு இன்று(மார்ச் 9) புறப்பட்ட விமானம் ஒன்று, எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
லண்டனிலிருந்து மும்பைக்கு இன்று(மார்ச் 9) புறப்பட்ட விமானம் ஒன்று, எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் நடவடிக்கைகளால், மேற்காசிய பிராந்தியத்தில் வான் வெளியைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
இந்நிலையில், ஹீட்த்ரோ விமான நிலையத்திலிருந்து இன்று(மார்ச் 9) இண்டிகோ விமானம் (6இ 002) 300 பயணிகளுடன் மும்பைக்கு புறப்பட்டது. இந்திய நேரப்படி, இன்று(மார்ச் 9) அதிகாலை 3.03 மணிக்கு லண்டனிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் மேற்காசிய பிராந்தியத்தில் விதிக்கப்பட்ட திடீர் வான் வெளி கட்டுப்பாடுகளால் கெய்ரோவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அந்த விமானம் செவ்வாய்க்கிழமை(மார்ச் 10) மும்பைக்குத் திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள விமான நிறுவனம் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்பட ஹோட்டல்களில் தங்கும் வசதி என அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
IndiGo flight 6E002 from London Heathrow (LHR) to Mumbai (BOM) was diverted to Cairo (CAI) on March 8, 2026 due to FDTL limitations. The flight will operate tomorrow
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.