மணிப்பூரில் சட்டவிரோதமாகக் குடியேறிய மியான்மர் நாட்டினர்! 24,475 பேர் வெளியேற்றம்!
மணிப்பூரில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் 14,992 பேர் மீண்டும் மியான்மருக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது குறித்து...
மியான்மர் நாட்டில் இருந்து மணிப்பூருக்கு 24,475 பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இவற்றில் 14,992 பேர் மீண்டும் மியான்மருக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் கொந்தெளஜம் கோவிந்தாஸ் இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசினார்.
அண்டை நாடுகளில் அசாதாரண சூழல் நிலவிவருவதால், கடந்த சில ஆண்டுகளாக மணிப்பூரில் முறையான ஆவணங்களின்றி குடியேறும் மியான்மர் நாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் சட்டவிரோத குடியேற்றம் குறித்து மணிப்பூர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் லோகேஷ்வர் சிங் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து கோவிந்தாஸ் பேசியதாவது:
மியான்மரைச் சேர்ந்த மொத்தம் 24,475 சட்டவிரோத குடியேறிகள் இதுவரை மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 14,992 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்தக் குடியேறிகள் காம்ஜோங், டெங்நௌபால் மற்றும் சாண்டல் ஆகிய மூன்று எல்லை மாவட்டங்கள் வழியாக நுழைந்தனர்.
காம்ஜோங் பகுதியில் நுழைந்த 6,545 பேரில் 5,378 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எஞ்சிய 1,167 பேர் கூடாரம் அமைத்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டெங்நௌபால் பகுதியில் 3,560 பேரில் 14 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சிய 3,546 பேரின் பயோமெட்ரிக் பதிவுகள் சேகரிக்கப்பட்டு, முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சாண்டல் பகுதியில் 14,370 பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இவர்களில் 9,600 பேர் மணிப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
24,475 Illegal Myanmar immigrants detected in Manipur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.