FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய விமானம்!

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய விமானம் பற்றி...

4 செப்டம்பர் 2026, 1:45 pm IST
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய விமானம் - PTI
பகிர்:

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்துமிடத்தில் நிற்கச் சென்ற இண்டிகோ விமானம் கம்பத்தில் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

மகாராஷ்டிரத்தின் நவி மும்பை விமான நிலையத்திலிருந்து ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் 6இ 225 இன்று காலை இயக்கப்பட்டது.

ஸ்ரீநகரில் தரையிறங்கிய இண்டிகோ விமானம், 6வது நிறுத்தமிடம் நோக்கிச் சென்றபோது அப்பகுதியிலிருந்த உலோகக் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமான ஊழியர்கள், பயணிகள் உள்பட யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. விமானத்தின் படிக்கட்டுகள் திறக்கப்படாததால், விமான நிலையத்திலிருந்த தனிப் படிக்கட்டுகள் மூலம் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

- PTI

மேலும், விதிமுறைகளின் படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும் இண்டிகோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய விமானத்தின் சேவையைப் பராமரிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்துவதாகவும், உரிய அனுமதிகளைப் பெற்றும் பின்னர் மீண்டும் செயல்பாடுகளை தொடங்குவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகைகளும் புறப்பாடுகளும் எவ்வித பாதிப்பும் இன்றி குறிப்பிட்ட அட்டவணைப்படி செயல்பட்டு வருகின்றன.

summary

Indigo Plane hits pole at Srinagar airport!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments