அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து: 4 பேர் பலி!
அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது பற்றி..
அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள செல்டோவியா கடற்கரைப் பகுதிக்கு அருகே உள்ள கடல் நீரேரிப் பகுதியில் பைப்பர் PA-24' (Piper PA-24) ரக சிறிய விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
செல்டோவியா விமான நிலையம் ஆங்கரேஜிலிருந்து தென்மேற்கே சுமார் 219 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
விமானம் புதன்கிழமை பிற்பகலில் ஆஞ்சரேஜ் நகரில் உள்ள ஃபீல்டு விமான நிலையத்திலிருந்து செல்வடோவியா உள்ளூர் விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது சுமார் 15 அடி ஆழமுள்ள நீரில் மூழ்கியதாகத் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் அலாஸ்கா பிராந்தியத் தலைவர் கிளின்ட் ஜான்சன் தெரிவித்தார்.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் அலாஸ்கா மாநில காவல்துறையினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.
அடர்ந்த மூடுபனி நிலவிய சூழலில் விமானம் இரண்டாவது முறையாக ஓடுபாதையை நோக்கி இறங்க முயன்றபோது, விமானிகளால் ஓடுபாதையைக் காண முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
A small plane carrying four people crashed into shallow waters next to a remote coastal town in Alaska on Wednesday, killing everyone on board, according to officials.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.