தெலங்கானா மருந்து ஆலை வெடி விபத்தில் இருவர் பலி!
தெலங்கானாவில் உள்ள மருந்து ஆலையில் நடந்த வெடி விபத்து குறித்து...
தெலங்கானாவில் உள்ள மருந்து ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் பலியாகினர்.
தெலங்கானாவின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் ஏற்பட்ட ரியாக்டர் வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு தொழிலாளர்கள் பலியாகினர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர்.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “இரண்டு பேர் பலியாகினர். ஒன்பது பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் 50 சதவீதத்துக்கும் அதிகமான தீக்காயங்களுக்கு உள்ளானார்கள். ஏழு பேர் லேசான காயங்களுடன் தப்பினர்" என்று தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Two people were killed in an explosion at a pharmaceutical plant in Telangana on Friday night.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.