FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உத்தமபாளையத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: இருவர் பலி

இரு சக்கர வாகனத்தின் மீது, அரசுப் பேருந்து மோதி விபத்துள்ளானது குறித்து...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 11:46 am IST
உத்தமபாளையத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: இருவர் பலி - சித்திரிப்புப் படம்
பகிர்:

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துள்ளானதில் இருவர் பலியாகினர்.

உத்தமபாளையத்தைச் சேர்ந்த வேதநாயகம் (43) மற்றும் அவருடைய நண்பர் பிரபாகரன் (39) இருவரும் வேலை முடிந்துக் கொண்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, பி.டி.ஆர். குடியிருப்பு அருகே, திருச்சியிலிருந்து கம்பம் நோக்கிச் வந்த அரசுப் பேருந்து, எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

Advertisement

Advertisement

​இந்த விபத்தில், வேதநாயகம் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பயணித்த பிரபாகரன் என்பவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக, மீட்கப்பட்ட அவருக்கு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த பிரபாகரன், சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார்.

​உயிரிழந்த வேதநாயகத்திற்குத் திருமணமாகி 4 குழந்தைகளும், பிரபாகரனுக்குத் திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். ஒரே விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து உத்தமபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

summary

Two people died after a government bus collided with a two-wheeler in Uthamapalayam, Theni district, on Saturday night.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments