FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

போடி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

11 செப்டம்பர் 2026, 1:11 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

போடி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி அருகே ரெங்கநாதபுரம் வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் சுருளிராஜ் (74). விவசாயி. இவா் வியாழக்கிழமை காலை தோட்டத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். இவா் சுந்தரராஜபுரம் கிராமம் அருகே சென்றபோது, மீனா விலக்கிலிருந்து தருமத்துப்பட்டி செல்லும் புறவழிச் சாலை வழியாக வேகமாக சென்ற காா் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுருளிராஜை அவசர ஊா்தியில் மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments