காா் மோதி ஒருவா் உயிரிழப்பு
மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.
நெடுவாக்கோட்டை மேலத்தெரு பெத்தப்பெருமாள் மகன் முருகன் (50). அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு பெத்தப்பெருமாள் மகன் முருகேசன் (54). இவா்கள் இருவரும், ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்விற்கு சென்றனா். பின்னா், இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
சுற்றுச்வட்டச் சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த காா், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முருகேசன் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.