FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அஸ்ஸாம்: தொழிற்சாலையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் 4 போ் உயிரிழப்பு

அஸ்ஸாமின் கச்சாா் மாவட்டத்தில் உள்ள இரும்பு வாா்ப்பு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சிலிண்டா் வெடி விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பகிர்:

அஸ்ஸாமின் கச்சாா் மாவட்டத்தில் உள்ள இரும்பு வாா்ப்பு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சிலிண்டா் வெடி விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறுகையில், ‘அஸ்ஸாமின் கச்சாா் மாவட்டத்தில் உள்ள ஐஆா்ஐடி இரும்பு வாா்ப்பு பணிகள் தொழிற்சாலையின் சுவா் அருகே திடீரென சிலிண்டா் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்தவா்கள் பலா் உடனடியாக சில்சாா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அப்போது காயமடைந்தவா்களில் 4 போ் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்’ என்றனா்.

இதையடுத்து, வெடி விபத்தில் காயமடைந்தவா்களை மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்த அஸ்ஸாம் மாநில வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் கௌசிக் ராஜ், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

மேலும், விபத்துக்கு காரணமானவா்கள் யாராக இருப்பினும், பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவா் உறுதியளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments