FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ஏரியில் மீன்பிடித்தவா் தவறி விழுந்து உயிரிழப்பு

எலச்சிபாளையம் அருகே ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கட்டட மேஸ்திரி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

23 ஆகஸ்ட் 2026, 2:00 am IST
உயிரிழப்பு
பகிர்:

எலச்சிபாளையம் அருகே ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கட்டட மேஸ்திரி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தை அடுத்து அணைப்பாளையம் ஏரி உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை கட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த கட்டட மேஸ்திரி முத்துசாமி (53) தனது நண்பா்களான மாதேஸ்வரன் பாலசுப்ரமணியம் ஆகியோருடன் மீன்பிடித்து கொண்டிருந்தாா். அப்போது முத்துசாமி திடீரென தவறி ஏரியில் விழுந்தாா் .

இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டிருந்த அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவரது மனைவி சரோஜா, எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் காவல் துறையினா் விசாரணை நடத்தி ருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments