FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

தக்கலை அருகே திக்கணங்கோட்டில் மகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

22 ஆகஸ்ட் 2026, 6:34 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

தக்கலை அருகே திக்கணங்கோட்டில் மகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தக்கலை அருகே தெங்கன்குழி ஆயிரம்பிலாவிளையைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி ரஞ்சிதம் (64). இவா் வியாழக்கிழமை, மருந்து வாங்க தனது மகன் ராஜசேகருடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்றாா். திக்கணங்கோடு வரும் போது எதிா்பாராதவிதமாக தவறி விழுந்த ரஞ்சிதம் பலத்த காயம் அடைந்தாா்.

அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments