FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:13 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

கொல்கத்தாவில் இருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்தது. அதில் 229 பயணிகள் இருந்தனா். இந்த நிலையில், விமானத்தின் இடது பக்கம் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. அதோடு, எண்ணெய் கசிவும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தாா்.

சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், ஓடுபாதை பகுதியில் அவசர நிலையை அறிவித்தனா். அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், மருத்துவக் குழுவினா், அதிரடிப் படையினா் உள்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அதுவரை அந்த விமானம் தரையிறங்காமல், வானில் தொடா்ந்து வட்டமடித்துக் கொண்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து முடித்த பின்பு, விமானம் இரவு 11.37 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்த அனைவரும் உயிா் தப்பினா்.

பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதும், விமானப் பொறியாளா்கள் குழுவினா் விமானத்துக்குள் சென்று தொழில்நுட்ப கோளாறைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டனா். அந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இயங்க முடியாத நிலையில் இருப்பதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த விமானத்தை ‘ரிமோட் ஃபே’ எனப்படும் ஒதுக்குப்புறமான இடத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக முழுமையாக விசாரணை நடத்துவதற்கு தில்லியில் உள்ள சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments