FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

என்ஜின் கோளாறு: தில்லியில் அலையன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்!

அலையன்ஸ் விமானம் தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறித்து...

11 செப்டம்பர் 2026, 6:58 pm IST
அலையன்ஸ் விமானம் - கோப்புப்படம்.
பகிர்:

என்ஜின் கோளாறு காரணமாக அலையன்ஸ் விமானம் தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உ.பி.யின் பிரயாக்ராஜில் இருந்து 40 பயணிகளுடன் அலையன்ஸ் விமானம் தலைநகர் தில்லிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்டது.

இந்த நிலையில் விமானத்தின் ஒரு என்ஜின் திடீரென செயலிழந்ததால் அந்த விமானம் தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.

பின்னர் அந்த விமானம் பொறியாளர்கள் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் 40 பயணிகளும் 4 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.

இச்சம்பவத்தால் தில்லி விமான நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது.

Flightradar24.com என்ற விமானக் கண்காணிப்பு இணையதளத்தில் உள்ள தகவலின்படி, விமானம் பிற்பகல் 2.15 மணியளவில் தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

summary

An Alliance Air aircraft, carrying 40 passengers, made an emergency landing at the Delhi airport due to an engine failure on Friday afternoon, according to a source.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments