FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வாரணாசி விமான நிலையத்தில் சோதனையின்போது தவறுதலாக வெடித்த துப்பாக்கி: இருவர் காயம்

வாரணாசி விமான நிலையத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இரு ஊழியர்கள் காயமடைந்திருப்பது பற்றி...

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 1:02 pm IST
துப்பாக்கி.
பகிர்:

வாரணாசி விமான நிலையத்தில் சோதனையின்போது பயணியின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம், அசம்கர் பகுதியைச் சேர்ந்த அந்தப் பயணி, தனது மனைவியுடன் ஏர் இந்தியா விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை மும்பை புறப்பட தயாராகவிருந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக சோதனையின்போது அவர் தன்னிடம் கைத்துப்பாக்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

துப்பாக்கியும் அதன் ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டபோது தவறுதலாக வெடித்துள்ளது. துப்பாக்கியிலிருந்து வெளிவந்த தோட்டா முதலில் தரையில் பட்டு, பின்னர் அருகில் நின்றிருந்த இரு ஊழியர்கள் மீது பாய்ந்தது. இதில் பெண் ஊழியர் ஒருவரின் தொடையிலும், ஆண் ஊழியரின் கையிலும் காயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

காயமடைந்த இரு ஊழியர்களின் நிலையும் சீராக உள்ளதாகவும், அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வாரணாசி விமான நிலைய இயக்குநர் குப்தா தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனால் வாரணாசி விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

summary

Two people were injured after a gun carried by an Air India passenger went off during a weapons check at Varanasi airport on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments