வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் 'ருத்ரா' தோற்றம் வெளியீடு!
'வாரணாசி' திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி...
'வாரணாசி' திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் வாரணாசி. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். ராஜமௌலியின் முந்தைய படமான 'ஆர்ஆர்ஆர்'-க்காக ஆஸ்கர் விருது வென்ற எம். எம். கீரவாணி 'வாரணாசி' படத்திற்கு இசையமைக்கிறார்.
ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றன. இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் 51ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ருத்ரா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வ இன்று வெளியிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த போஸ்டரை ராஜமௌலி தனது எக்ஸ தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள மூங்கில் படகில் மகேஷ் பாபு சாய்ந்திருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த பதிவில் ஆப்பிரிக்க பின்னணியில் அவர் இருப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.
"தீவிரம் மட்டுமே அவரது ஒரே குணம் அல்ல... வாரணாசி படத்தில் ருத்ரா.," என்று அவர் பதிவிட்டுள்ளார்.
The makers of "Varanasi" have unveiled the first look poster of Mahesh Babu, who is set to essay the role of Rudhra in the film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.