வாரணாசி படப்பிடிப்பை நிறைவு செய்த மகேஷ் பாபு!
இறுதிக்கட்டத்தில் வாரணாசி படப்பிடிப்பு...
நடிகர் மகேஷ் பாபு வாரணாசி திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் வாரணாசி. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். ராஜமௌலியின் முந்தைய படமான 'ஆர்ஆர்ஆர்'-க்காக ஆஸ்கர் விருது வென்ற எம். எம். கீரவாணி 'வாரணாசி' படத்திற்கு இசையமைக்கிறார்.
ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றன. ஆயிரம் கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக இப்படம் தயாராகி வருகிறது. இந்திய சினிமாவின் அடுத்தகட்ட பாய்ச்சலாகவும் இருக்கும் எதிர்பாப்பு நிலவுகிறது.
Advertisement
Advertisement
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டிலிருந்து நடைபெற்று வரும் நிலையில், நடிகர் மகேஷ் பாபு தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுமையான வாரணாசி படப்பிடிப்பும் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடைகிறதாம்.
Reports indicate that actor Mahesh Babu has wrapped up the shooting for the movie Varanasi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.