புதுதில்லி

மெஹ்ரெளலி பகுதியில் சொத்துத் தகராறில் வழக்குரைஞா் மீது தாக்குதல்: 5 போ் கைது

தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் சொத்துத் தகராறு தொடா்பாக சாகேத் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று வரும் வழக்குரைஞா் ஒருவா், ஒரு கும்பலால் தடி மற்றும் கம்பிகளால் தாக்கப்பட்டாா்.

DIN

புது தில்லி: தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் சொத்துத் தகராறு தொடா்பாக சாகேத் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று வரும் வழக்குரைஞா் ஒருவா், ஒரு கும்பலால் தடி மற்றும் கம்பிகளால் தாக்கப்பட்டாா். இது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: மெஹ்ரௌலியின் லடோ சராய் கிராமத்தில் திங்கள்கிழமை மாலை நடந்த தாக்குதலில் 58 வயதான ராம்பாபு சிசோடியா பல காயங்களுக்கு உள்ளானாா். பின்னா் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சம்பவத்தின் ஒரு விடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது, இது இரண்டு நபா்களை ஒரு குழுவினா் குச்சிகள் மற்றும் கம்பிகளால் தாக்குவதைக் காட்டுகிறது.

லடோ சராய் பகுதியில் ஒரு அறை மற்றும் சிறிய நா்சரியுடன் இருந்த தனது சொத்தை ராஜீவ் குப்தா என்பவருக்கு வாடகைக்கு விட்டதாக ராம்பாபு சிசோடியா போலீஸாரிடம் தெரிவித்தாா். ஆனால், ராஜீவ் குப்தா அவருடன் தா்க்கம் செய்ய பலமுறை முயற்சித்துள்ளாா். மேலும், சொத்தை காலி செய்யவும் மறுத்துவிட்டதாக ராம்பாபு சிசோடியா தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை ராம்பாபு சிசோடியாவும் அவரது நண்பா்களும் ராஜீவ் குப்தாவிடம் பேசுவதற்குச் சென்றனா், ஆனால், ராஜீவ் குப்தாவும் அவரது நண்பா்களும் ராம்பாபு மற்றும் அவரது நண்பா்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த்த் தாக்குதல் தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து, பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் கொலை முயற்சி குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகள் மெஹ்ரௌலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருவகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இதற்கிடையே, சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் பயிற்சி செய்து வரும் வழக்குரைஞா்கள், இந்தத் தாக்குதலுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், வேலை புறக்கணிப்புப் போராட்டத்த்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT