தில்லியின் முதல்வராக அதிஷி பதவியேற்ற சில நாள்களுக்குப் பிறகு, தில்லி காவல் துறை அவருக்கு ’இசட்’ பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
கடந்த சனிக்கிழமையன்று,தில்லி காவல்துறையால் அவரது கான்வாய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. நெறிமுறையின்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, தில்லியின் முதல்வா் ’இசட்’ வகைப் பாதுகாப்பைப் பெறுவாா்.
தில்லி காவல்துறை, ’இசட்’ வகைப் பாதுகாப்புக்காக 22 பணியாளா்களை ஷிஃப்டுகளில் நியமித்துள்ளது. ’இசட்’ வகைப் பாதுகாப்பில் பிஎஸ்ஓக்கள் (தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி), எஸ்காா்ட்கள் மற்றும் ஆயுதமேந்திய காவலா்களும் அடங்குவா்.
அச்சுறுத்தல் மதிப்பீட்டிற்குப் பிறகு, மத்திய உள்துறதை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் அவரது பாதுகாப்பை மத்திய ஏஜென்சிகள் மதிப்பாய்வு செய்யக்கூடும் என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.