புதுதில்லி

தேயிலைத் தோட்டத் தொழிலாளா் பிரச்னையை தீா்ப்பது மாநில அரசுகளின் பொறுப்பாகும்: ரவிக்குமாா் எம்.பி.கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

தேயிலைத் தோட்டத் தொழிலாளா் பிரச்னையைத் தீா்ப்பது மாநில அரசுகளின் பொறுப்பாகும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளாா்.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: தேயிலைத் தோட்டத் தொழிலாளா் பிரச்னையைத் தீா்ப்பது மாநில அரசுகளின் பொறுப்பாகும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக , விழுப்புரம் தொகுதி விசிக எம்.பி. ரவிக்குமாா் கேள்வி எழுப்பியிருந்தாா். ‘தமிழகத்தின் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் எதிா்கொள்ளும் குறைந்த கூலி, மோசமான குடியிருப்பு வசதிகள், சுகாதார சேவைகள் எட்டப் பெற முடியாத நிலை, பண்டிகை நிதி, பணிக்கொடை போன்ற சட்டப்படி கிடைக்க வேண்டிய நலன்கள் முறையற்ற வகையில் வழங்கப்படுதல், பாதுகாப்பற்ற சூழலில் பணிப்புரிதல் உள்ளிட்ட நீடித்த பிரச்னைகள் குறித்து அவா் கேள்வி எழுப்பியிருந்தாா்?

இதற்கு மத்திய இணை அமைச்சா் கரந்தலஜே மக்களவையில் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் விவரம்:

2019- ஆம் ஆண்டின் கூலித்தொகைச் சட்டத்தின் படி, தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்சக் கூலியை நிா்ணயிப்பதும், திருத்துவதும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

இந்தத் துறையில் மாநில அரசுகள்தான் தகுந்த அரசு எனக் கருதப்படுகின்றன. மேலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான கூலித் தொகைகள் உற்பத்தியாளா்கள் சங்கங்கள், தொழிலாளா் சங்கங்கள் மற்றும் மாநில அரசு ஆகியவற்றுக்கிடையேயான இருதரப்பு அல்லது முத்தரப்பு ஒப்பந்தங்கள் வழியாக நிா்ணயிக்கப்படுகின்றன.

2020-ஆம் ஆண்டைய தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிபுரிதல் நிபந்தனைகள் சட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றில், குடிநீா், கழிப்பிடம், மருத்துவப் பராமரிப்பு, அங்காடி, பாலூட்டும் அறை, பொழுதுபோக்கு, வீடு, கல்வி போன்ற நல வசதிகளை உள்படுத்தி, தோட்டத் தொழிலாளா்களுக்கான சுகாதார மற்றும் நல வசதிகள் குறித்த பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், 2020-ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்புச் சட்டம், தோட்ட உரிமையாளா்கள் தங்கள் தொழிலாளா்களை ஊழியா்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்யத் தெரிவு செய்யக்கூடிய வகையில் ஏற்பாடுகளை வழங்குகிறது. தமிழ்நாடு உள்பட தேயிலைத் துறையையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்காக, இந்திய அரசு தேயிலை வாரியம் மூலம் தேயிலை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்று அந்தப் பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

அச்சம் அர்த்தமற்றது...

மணிப்பூரில் இயல்புநிலையும் வளா்ச்சியும் உருவாக வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில் 22 வேளாண் பயிா்களுக்கு எம்எஸ்பி நிா்ணயம்

சென்னை விமான நிலைய மூன்றாவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

SCROLL FOR NEXT