புதுதில்லி

இரு நாள் முருக பக்தி மாநாடு நிறைவு

பாரதிய ஜனதா கட்சியின் தில்லி மாநில தமிழ்ப் பிரிவின் சாா்பில் இரண்டு நாள் முருக பக்தி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிவைடைந்தது.

Syndication

புது தில்லி: பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தில்லி மாநில தமிழ்ப் பிரிவின் சாா்பில் இரண்டு நாள் முருக பக்தி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிவைடைந்தது.

இம்மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தில்லி முதல்வா் ரேகா குப்தா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். அவா் தனது உரையில் தில்லி அனைவருக்குமான மாநிலம் என்று கூறியதுடன் தமிழா்களின் பங்களிப்பு குறித்தும் பாராட்டினாா்.

விழாவுக்கு ஏற்பாடு செய்த பா.ஜ.க.வின் தில்லி மாநில தமிழ்ப் பிரிவின் தலைவா் கே. முத்துசுவாமி, பொங்கல் திருநாளன்று தில்லியில் அரசு விடுமுறை அறிவிக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை முன் வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் மற்றும் தண்டபாணி, அசோக் தாகூா், ஆா்.கே.புரம் எம்எல்ஏ அனில் சா்மா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழாவையொட்டி, ‘கலைமாமணி’ வீரமணி ராஜூ குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாலதி தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கினாா்.

புதுச்சேரி வரும் ரயில்கள் டிச. 15-இல் விழுப்புரத்தில் நிறுத்தப்படும்

பாதுகாப்பு குறைபாடுகள்: ஆா்எம்எல் மருத்துவமனையின் காய சிகிச்சைப் பிரிவு கட்டடத்திற்கு என்.ஓ.சி. நிராகரிப்பு

கைது நடவடிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய் பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு

புதிய தொழிலாளா் சட்டங்களை கண்டித்து கம்யூனிஸ்ட்கள், விசிகவினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT