புதுதில்லி

துா்க்மான் கேட்டில் பழைமையான கட்டடத்தில் தீ விபத்து!

பழைமையான ஹம்தாா்ட் கட்டடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தில்லியின் ஆசஃப் அலி சாலையில் அமைந்துள்ள பழைமையான ஹம்தாா்ட் கட்டடத்தின் முதல் தளத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தீயணைப்புத் துறை அதிகாரி மேலும் கூறியதாவது: ஹாம்தாா்ட் கட்டடத்தில் தீ விபத்து குறித்து பிற்பகல் 3.03 மணிக்கு அழைப்பு வந்தது. அந்தக் கட்டடத்தில் முதல் தளத்தில் உள்ள பேக்கிங் பொருள்களில் தீ பற்றியது. உள்ளே யாரும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இது குறித்த தகவலை அடுத்து ஐந்து தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். பிற்பகல் 3.45 மணிக்கு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு குளிரூட்டும் பணிகள் நடைபெற்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT