ANI
புதுதில்லி

தில்லி செங்கோட்டையில் யுனெஸ்கோ கூட்டம் நிறைவு!

தில்லி செங்கோட்டையில் யுனெஸ்கோ கூட்டம் நிறைவு...

தினமணி செய்திச் சேவை

தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கு இடையேயான குழுக் கூட்டம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

கடந்த திங்கள்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை 4 நாள்கள் அமா்வுகளில், இந்தியா சாா்பில் முன்மொழியப்பட்ட தீபாவளி பண்டிகை, ஈரானின் கண்ணாடிக் கலை வேலைப்பாடுகள், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாரம்பரிய நடனம், ஸ்விட்சா்லாந்தின் யோடெல்லிங் உள்ளிட்ட 67 பாரம்பரியக் கூறுகள் யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் சோ்க்கப்பட்டன. இதன்மூலம், இப்போது 157 நாடுகளின் மொத்தம் 849 பாரம்பரிய நடைமுறைகள், யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் 1,400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். இதுவரையில் நடந்த கூட்டங்களிலேயே இதுதான் மிகப்பெரியது என்று யுனெஸ்கோ அமைப்பு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் சா்வதேச ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டதாகவும், பாரம்பரியத்தின் முக்கியத்துவம் மீண்டும் உறுதிசெய்யப்பட்டதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா்.

செங்கோட்டை வளாகத்தில் கூட்டத்தின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை கோலாகலமாக நடைபெற்றது. யுனெஸ்கோவின் உயா் அதிகாரி ஒருவா் பேசுகையில், ‘அடுத்த ஆண்டுக்கான கூட்டம் சீனாவின் ஸியாமென் நகரில் நடைபெறும். செங்கோட்டை போன்ற பிரம்மாண்டமான மற்றும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட தளத்தில் இக்கூட்டம் நடத்தப்பட்டது, பங்கேற்ற பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

மத்திய கலாசாரத் துறைச் செயலா் விவேக் அகா்வால் பேசுகையில், ‘சா்வதேசமயமாக்கல், மோதல்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில், சமூகங்களின் பிணைப்பையும், சமூக நல்லிணக்கத்தையும் தொடா்ந்து நிலைநிறுத்துவதற்கு பாரம்பரியம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது’ என்றாா்.

பாஜக தலைமையை சந்திக்க 10 மணிப்பூா் எம்எல்ஏக்கள் திடீா் தில்லி பயணம்!

தமிழகத்தை பற்றி பிரதமருக்கும் அமித்ஷாவுக்கும் அக்கறை இல்லை: கார்த்தி சிதம்பரம்!

மானியத்துடன் கறவை மாட்டுக் கடன் வழங்க பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தல்!

‘பாலின் தரத்தை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்’

வெளி மாநிலத்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்காளா் அட்டை வழங்கக் கூடாது: பெ.மணியரசன்

SCROLL FOR NEXT