வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில் உள்ள கழிவுநீா் வடிகாலில் இருந்து வெள்ளிக்கிழமை காலை ஆண் சடலம் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தகவலறிந்த காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அங்கே 35 வயது ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்தை ஆய்வு செய்து காரணத்தை கண்டறியவும், உயிரிழந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் தடயவியல் குழு வரவழைக்கப்பட்டனா்.
உடலில் ஏதேனும் காயங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்களின் அறிகுறிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய, உடல் குரு தேஜ் பகதூா் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது.
இது தொடா்பாக பிஎன்எஸ் பிரிவு 194-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, காணாமல் போனவா்கள் குறித்த தரவுகளை சரிபாா்த்து வருகிறோம் என காவல் துறையினா் தெரிவித்தனா்.