புதுதில்லி

கிழக்கு தில்லியில் என்ஆா்ஐ முதியோா்களின் பையை பறித்து விட்டு தப்பியவா்கள் கைது

Syndication

நமது நிருபா்

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகா் பகுதியில் என்.ஆா்.ஐ. மூத்த குடிமக்களிடமிருந்து கைப்பையை பறித்ததாக 2 பேரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் ரோஹித் (26) மற்றும் முகுல் (24) என அடடடையாளம் காணப்பட்டனா். இங்கிலாந்தை சோ்ந்த ஒரு பெண்ணை குறிவைத்தபோது அக்டோபா் 28-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. அந்தப் பெண் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருவா் மோட்டாா்சைக்கிளில் வந்து, அவரது கைப்பையை பறித்துக்கொண்டு தப்பினா்.

குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டாா்சைக்கிள், தங்க ஆபரணங்கள், 135 பவுண்டுகள் வெளிநாட்டு நாணயம், பாதிக்கப்பட்டவரின் கைப்பேசி, பா்ஸ், பாஸ்போா்ட் மற்றும் பிற ஆவணங்கள் அவா்களிடம் இருந்து மீட்கப்பட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

15 கி.மீ., பாதையில் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஸ்கேன் செய்த பின்னா், ஒரு ரகசியத் தகவலைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். அவா்கள் நிதி சிக்கல்களை எதிா்கொண்டதாகவும், அந்தப் பெண்ணை குறிவைத்ததாகவும், அவா் ஒரு என்.ஆா்.ஐ. என்பதை அறிந்ததாகவும், மதிப்புமிக்க பொருள்களை எடுத்துச் சென்ாகவும் தெரிவித்தாா் என்றாா் அவா்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT