தில்லியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை! Photo: X / IANS
புதுதில்லி

தில்லியில் துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர் தற்கொலை?

தில்லியில் துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர் தற்கொலை செய்துகொண்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி ஜந்தர் - மந்தரில் துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர் திங்கள்கிழமை காலை தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள தில்லி காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட நபர், தில்லி ஜந்தர் - மந்தர் பகுதியில் காற்று மாசுக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தில்லி மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “தற்கொலை செய்துகொண்ட நபரின் அடையாளம் இதுவரை தெரியவில்லை, சம்பவ நடந்த இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ”அந்த நபர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது விசாரணையில் உறுதி செய்யப்படும். சடலம் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

Man commits suicide by shooting himself in Delhi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடல் அலையே நீ போய்... ருபான்ஷி!

நவ. 13-ல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

ஈரோட்டில் கடத்தப்பட்ட குழந்தை நாமக்கலில் மீட்பு!

இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

தங்கம் விலை: காலை ரூ. 880, மாலை ரூ.520 உயர்வு

SCROLL FOR NEXT