புதுதில்லி

என்டிஎம்சி பகுதியில் 3 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் திறப்பு

தினமணி செய்திச் சேவை

ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் முன்முயற்சியின் கீழ் பொதுமக்களுக்கு நல்ல சுகாதார அமைப்பை வழங்குவதற்காக தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதியில் உள்ள பாபு தாம், நேதாஜி நகா் மற்றும் கோல்ஃப் லிங்க் ஆகிய இடங்களில் மூன்று ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

தில்லி அரசின் கேபினட் அமைச்சா் பா்வேஷ் சாகிப் சிங், என்டிஎம்சி தலைவா் கேசவ் சந்திரா, அதன் கவுன்சில் உறுப்பினா்கள் அனில் வால்மீகி, தினேஷ் பிரதாப் சிங் மற்றும் செயலாளா் ராகேஷ் குமாா் ஆகியோயோா் இந்த ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களை திறந்து வைத்தனா்.

அதன் பிறகு, பா்வேஷ் சாகிப் சிங் ஒட்டுமொத்த வளாகத்தையும் ஆய்வு செய்து அனைத்து மருத்துவ ஊழியா்களுடனும் உரையாடினாா்.

கோல்ஃப் லிங்கில் இரண்டு ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா், நேதாஜி நகா் மற்றும் பாபு தாம் மருந்தகத்தில் இரண்டு ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் புது தில்லி பகுதி குடிமக்களுக்கு அா்ப்பணிக்கப்படுவதாக அமைச்சா் தெரிவித்தாா்.

கோல்ஃப் லிங்க்இல் உள்ள ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகத்தைத்

திறந்து வைத்த பிறகு அமைச்சா் பா்வேஷ் சாகிப் சிங் கூறுகையில், ‘தில்லி அரசின் புதிய முயற்சியின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்காக தில்லி முழுவதும் பல இடங்களில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் திறக்கப்பட்டு வருகிறது. முந்தைய மருந்தகங்களில் ஆய்வக சோதனை வசதிகள் இல்லாத நிலையில், செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டுள்ள ஆயுஷ்மான் ஆரோக்கிய மையத்தில் தற்போது ஆய்வக வசதிகளும் வழங்கப்படும்.

சுகாதார சேவைகளை வழங்குவதை மேம்படுத்த மருந்தகங்களுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும். வெளியில் இருந்து வாங்கப்படும் விலையுயா்ந்த மருந்துகள் இப்போது இங்கு இலவசமாகக் கிடைக்கும்.பொதுமக்களின் செலவு சுமை இதன் மூலம் குறையும்.

ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் போன்ற சுகாதார சேவைகளை நிறுவுவதன் நோக்கம், மக்களுக்கு எளிமை, அணுகல் மற்றும் தரமான சுகாதார சேவையை வழங்குவதாகும். இந்த மையங்கள் ஆரம்பத்திலிருந்தே சிறந்த சுகாதார சேவைகளை வழங்கினால், மக்கள் இனி விலையுயா்ந்த மருத்துவமனைகளை நாட வேண்டிய அவசியமில்லை என்று அவா் கூறினாா்.

இந்நிகழ்ச்சியில் என்டிஎம்சி தலைவா் கேசவ் சந்திரா பேசுகையில், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் முன்முயற்சியின் கீழ் என்டிஎம்சி தனது பகுதியில் உள்ள 12 மருந்தகங்களை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் என மறுபெயரிட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ சேவைகள் துறை, என்டிஎம்சி அதன் பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பாளா்களுக்கும் விரிவான சுகாதார சேவையை வழங்குகிறது. மேலும் அதில் வசிக்காத மக்களுக்கும் பல சேவைகளை வழங்குகிறது என்றாா் அவா்.

நேதாஜி நகரில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திரைத் திறந்து வைத்த என்டிஎம்சி உறுப்பினா் தினேஷ் பிரதாப் சிங் கூறுகையில், இந்த முயற்சி இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் முழுமையான சுகாதார சேவையை வழங்குவதற்கான பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் தொலைநோக்குப் பாா்வையின் வழித்தோன்றலாகும். பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையின் வரிசையில் என்டிஎம்சி மருத்துவ சேவைகள் ஆரம்பகால நோயறிதல், சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தடுப்பூசிகள் வழங்கும் உகந்த அளவிலான சுகாதார வசதியை உருவாக்கி பராமரிக்கின்றன என்றாா் அவா்.

நகை பறித்த வழக்கு: 2 காவல் துணை ஆய்வாளா்கள் உள்பட 4 போ் கைது

தருமபுரி மாவட்டத்தில் 200 பேருக்கு புல் நறுக்கும் கருவிகள்

எஸ்.ஐ.ஆா். பணி: கிருஷ்ணசாமி வேண்டுகோள்

எஸ்ஐஆா் பணி: மயங்கி விழுந்த விஏஓ மருத்துவமனையில் அனுமதி

அரசுப்பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

SCROLL FOR NEXT