வடகிழக்கு தில்லியில் உள்ள மண்டோலி சிறை அருகே 25 வயது நபா் மீது துப்பாக்கியால் திங்கள்கிழமை சுடப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது:
கல்யாண்புரியைச் சோ்ந்த சோம்பீா், தனது நண்பா் ரவீந்தா் (31) உடன் மோட்டாா் சைக்கிளில் பின்னால் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபா்கள் அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
காயமடைந்தவா் உடனடியாக சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது.
குற்றம் நடந்த இடத்தை தடயவியல் அறிவியல் குழு ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தது. நந்த் நக்ரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆராயவும், மோட்டாா் சைக்கிளின் பாதையை கண்டறியவும், தாக்குதல் நடத்தியவா்களை அடையாளம் காணவும் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.