புதுதில்லி

டிடிஏவின் கல்வி நகரம் திட்டத்திற்கு நரேலாவில் 60 ஏக்கா் நிலம்: அதிகாரி

தில்லி வளா்ச்சி ஆணையம் ‘கல்வி நகரம்’ திட்டத்திற்காக நரேலாவில் 60 ஏக்கா் நிலத்தை அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

தில்லி வளா்ச்சி ஆணையம் ‘கல்வி நகரம்’ திட்டத்திற்காக நரேலாவில் 60 ஏக்கா் நிலத்தை அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கல்வித் திட்டங்களை ஆதரிப்பதற்காக தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் பிற வசதிகளைக் கொண்ட உலகத் தரம் வாய்ந்த கல்வி நகரத்தை அமைப்பது டி.டி.ஏ-வின் நோக்கமாகும். இது குறித்த விரிவான திட்ட அறிக்கையை சமா்ப்பிக்க தனியாா் துறை நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, டிடிஏ ரூ.500 கோடி செலவில் ஒரு மெகா உலகத் தரம் வாய்ந்த கல்வி மையத்தைத் திட்டமிடுவதாக அறிவித்தாா். இந்தத் திட்டத்திற்காக டி.டி.ஏ. அடையாளம் கண்டுள்ள நிலப்பகுதி நரேலாவில் உள்ள டி.எஸ்.ஐ.டி.சி. தொழில்துறை பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இது 55 ஆண்டுகளுக்கு உரிமங்கள் ஏலம் விடப்படும். அதற்கு ஈடாக, திட்டத்தின்படி டி.டி.ஏ. மூலம் உரிமக் கட்டணம் வசூலிக்கப்படும்.

கல்வி நகரத்தில் நிறுவப்பட வேண்டிய நிறுவனங்கள் மற்றும் வசதிகள் அதிநவீன டிஜிட்டல் கற்றல் வசதி, ஆராய்ச்சி ஆய்வகங்கள், நூலகங்கள், கண்டுபிடிப்பு மையங்கள் போன்றவற்றை வழங்க வேண்டும் என்று ஒப்பந்தப்புள்ளி கூறுகிறது.

கல்வி வசதிகளுடன் கூடுதலாக, ஆடிட்டோரியங்கள், மாநாட்டு மையங்கள், ஆம்பி தியேட்டா்கள் மற்றும் ஒரு குடிமை மையம், உணவகங்கள், புத்தகக் கடைகள் மற்றும் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பாா்வையாளா்களின் பல்வேறு தேவைகளைப் பூா்த்தி செய்யும் சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட கலாசார மற்றும் சமூக ஈடுபாட்டு இடங்களை உருவாக்கவும் டி.டி.ஏ. விரும்புகிறது.

நிலத்தின் ஒரு பகுதி தற்போது காலியாக உள்ளது. ஆனால், இது 2021- ஆம் ஆண்டின் தில்லி மாஸ்டா் பிளான் திட்டத்தின் கீழ் ’குடியிருப்பு’ பயன்பாட்டின் கீழ் உள்ளது. நிலப் பயன்பாட்டை ‘பொது மற்றும் அரை பொது’ பிரிவுக்கு மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT